செய்திகள் :

GuidanceTN விவகாரம்: 'மூவர் ஆந்திர அரசு பணியில் சேருவதை வேடிக்கை பார்த்தது ஏன்?' - அன்புமணி கேள்வி

post image

தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திர அரசுக்கு கசிந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் நடப்பது என்ன? 15 பணியாளர்கள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

கைடன்ஸ் தமிழ்நாடு
கைடன்ஸ் தமிழ்நாடு

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் பணியாற்றி வந்த 15 பேர் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும், அதனால் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் முதலீடு ஈர்ப்பு கட்டமைப்பையே நிலைகுலையச் செய்யும் இந்த விவகாரம் குறித்து யூக செய்திகள் மட்டுமே வெளிவரும் நிலையில், அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதி காப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை Guidance TN அமைப்பில் பணியாற்றியவர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியதாகவும், அது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்ததாக வெளியான செய்திகள் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்தன.

ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் பணியாளர்களோ, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் பணி செய்யும் சூழல் இல்லை என்றும், அதனால் புதிய அரசு பதவியேற்ற ஒரு மாதத்தில் பதவி விலகி விட்டதாக கூறியுள்ளனர். Guidance TN அமைப்பின் பணிச் சூழல் மோசமடைந்திருப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் எது உண்மை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு.

அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 3 தென் கொரிய நிறுவனங்களின் ரூ.1614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றன. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்ஃபீல்டு, Haier Electronics போன்ற நிறுவனங்களும் தமிழகத்தின் போட்டி மாநிலமான ஆந்திராவில் தொழில் முதலீடுகளை செய்ய தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசிய தகவல்கள் Guidance TN அமைப்பிலிருந்து கசியவிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் முக்கியத்தும் பெறுகின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழகத்தில் செய்யப்படவிருந்த தொழில் முதலீடுகள் குறித்த தகவல்கள் கசியவிடப்பட்டிருந்தால் அது துரோகமாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது சட்டப்படி கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதையும், அவர்களில் மூவர் ஆந்திர அரசு பணியில் சேருவதையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன்?

மோசமான பணிச்சூழல் காரணமாக அவர்கள் பதவி விலகியிருந்தால் அதுவும் தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியது தான். தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் தொழில் முதலீடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதில் துரோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சர்ச்சை செய்திகள் குறித்து அரசு அமைதி காக்கக் கூடாது. இந்த சர்ச்சை தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார் அன்புமணி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தவெக ஆட்சி கவிழ்ப்பு பற்றி பேசும் முன்னாள் அமைச்சர்கள்; என்ன திட்டத்தில் இருக்கின்றன திமுக, அதிமுக?

'ஆட்சி கவிழ்ப்பு' என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்றபோது திமுக தலைவர் ஸ்டாலின், ``ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலு... மேலும் பார்க்க

GuidanceTN விவகாரம்: "ஆந்திரா ஆளுங்கட்சிக்கு வேலை பார்த்த கீர்த்தனாதான் துரந்தரா?"- எடப்பாடி காட்டம்

தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட... மேலும் பார்க்க

`குவாரிக்கு எனது நிலத்தை லீசுக்கு கொடுத்தேன்; மண் எடுத்திருப்பது எனக்கு தெரியாது" - மூர்த்தி பேட்டி

மதுரை மாவட்டம் சத்திர வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள சரளை குவாரியில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024 வரை அரசு அனுமதித்ததை விட அதிகளவில் கனிமவளங்களை வெட்டி எடுத்து ரூ. 5.39 கோடி அளவிற்கு அரசுக்கு வருவாய்... மேலும் பார்க்க

'யோசனை ஓகே, ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம்' - அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து ட்ரம்ப் ஓப்பன் டாக்

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பரஸ்பர உடன்பாட்டை எட்டுவது கடினமான இலக்கு என்று அமெரிக... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மூர்த்தி: ``போதைப்பொருள் கடத்தல்கள்; திசைதிருப்பவே ரெய்டுகள்" - ஸ்டாலின்

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு ப... மேலும் பார்க்க

மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு ப... மேலும் பார்க்க