செய்திகள் :

Haiku: "ஹிப் ஹாப் ஆதி அண்ணா எங்களை பாட வச்ச அந்த மொமன்ட்..!" - அதிர்ச்சி அருண் பேட்டி

post image

ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் 'ஹைக்கூ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம்.

Haiku Movie
Haiku Movie

'ஹைக்கூ'-விலிருந்து தொடங்கி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை அதிர்ச்சி அருண் பகிர்ந்துகொண்டார்.

நம்மிடையே பேசியவர், " 'ஹைக்கூ' திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கும். ஷூட்டிங் முதல் நாளே இயக்குநர் யுவராஜ், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வரை எல்லாரையும் கூப்பிட்டு, 'அதிர்ச்சி யார் வந்தாலும் முதல்ல அண்ணான்னு கூப்பிடுங்க'னு சொல்லி ட்ரெயின் பண்ணி வச்சுட்டாரு.

என்னை எல்லோரும் அண்ணான்னுதான் கூப்பிட்டாங்க. நடிகை ஃபெமினா ஜார்ஜ் என்னை அண்ணான்னு கூப்பிட்டாகூட பரவால்ல, அவங்க அம்மாவே வந்து 'அண்ணா நல்லா இருக்கீங்களா'னு கேக்குற அளவுக்கு ஆயிடுச்சு" என ஜாலியாகத் தொடங்கியவர், "பல்லாவரத்தில் வளர்ந்த எனக்கு, அதே இடத்திலிருந்து வந்து பெரிய ஆளான சந்தானம் சார், சமந்தா மேம் போன்றவர்களைப் பார்த்துச் சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசை இருந்தது.

ஆனால் காலேஜ் முடித்து வெளியே வந்த பிறகே சினிமா நாம் நினைத்தது போல அவ்வளவு சுலபம் இல்லை எனப் புரிந்தது" என்றார்.

Adhirchi Arun
Adhirchi Arun

வி.ஜே. சித்துவின் டீம் சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையில் 'மீசைய முறுக்கு 2' படத்தில் ஒரு பாடலைப் பாடியிருந்தார்கள். அந்த டீமில் அதிர்ச்சி அருணும் ஒருவர். அந்தப் பாடல் அனுபவம் குறித்துப் பகிர்ந்தவர், "ஹிப்ஹாப் தமிழா ஆதி அண்ணன் கூப்பிட்டார். சித்து அண்ணன்தான் நம்மை ஹிப் ஹாப் ஆதி அண்ணா பாட வைக்கப் போவதாக சொன்னார்.

எங்களை அங்கு ஜாலியாக கோரஸ் பாட வச்சாரு." என்றவர், " 'டயங்கரம்' படத்துல சின்ன கேரக்டர்தான் பண்ணியிருக்கேன். அதுல கேரக்டர் வேற எதுவும் இல்ல. நான் ஒரு கேரக்டர் பண்ணினால் நல்லா இருக்கும்னு சித்து அண்ணன் கேட்டாரு. அவர் சொன்ன கேமியோ கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன்!" எனப் பகிர்ந்துகொண்டார்.

``'பாட்ஷா படத்துல ஆட்டோக்காரன் பாடலை முதல்ல பாடியது கிருஷ்ணராஜ் தான்!" - இயக்குநர் நாஞ்சில் அன்பழகன்

இசையமைப்பாளர் தேவா மறைந்த அடுத்த சில தினங்களிலேயே அவரது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜும் மரணமடைந்திருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று காலை மரணமடைந்த ... மேலும் பார்க்க

’தஞ்சாவூரு மண்ணெடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்... தமிழ்த் திரையிசைக்கு மேலும் ஒரு சோகம்

பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார், அவருக்கு வயது 75.சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்.சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம்... மேலும் பார்க்க

Jailer 2: "100% எல்லோரும் ஏற்கும்படி படம் எடுக்க முடியாது" - எதிர்மறை விமர்சனங்களுக்கு சரவணன் பதில்

சரவணன் முதன்மைக் கதாபாத்தித்தில் நடித்திருக்கும் 'சட்டமும் நீதியும்' வெப் தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வெப் தொடரின் செய்தியாளர் ச... மேலும் பார்க்க

"சினிமாவை AI அழித்துவிடாது" - சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏஐ குறும்படம்; சாதனை படைத்த சென்னை இளைஞர்கள்

சென்னையில் இயங்கி வரும் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் நிறுவனமான ஹைபிரிட் ஸ்டுடியோ சமீபத்தில் 'விங்ஸ் ஆஃப் ஃபையர்' என்கிற குறும்படத்தை வெளியிட்டிருந்தது. Hybrid Studio Teamஅது முழுக்க முழுக்க ஏ.ஐ-யால் உர... மேலும் பார்க்க

Jailer 2: "Startup, Comics எழுத்தாளர், இயக்குநர் ஆசை..." - ரித்விக் பகிரும் 'Future Plans'!

'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரித்விக்கைப் பேட்டி கண்டோம். 'ஜெயிலர் 2' அனுபவம், படப்பிடிப்புத் தள... மேலும் பார்க்க

``சக மனிதர்களைப் படிக்கிறேன்... அதன்படி நடிக்கிறேன்!'' - நடிகர் அருள்தாஸ் | Photo Album

நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்தாஸ் நடிகர் அருள்... மேலும் பார்க்க