"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்ட...
“Hello Girls; “LM-ஓ AM-ஓ இல்லை”: ஆங்கிலம், செந்தமிழில் கலக்கும் 80 வயது வியாபாரி நாகப்பன் தாத்தா!
ட
என்னதான் ஆங்கிலத்தை அலசி ஆராய்ந்து படித்தும், பேசும்போது தடுமாறுபவர்கள் இங்கு நிறைய பேர். அப்படியே ஆங்கிலத்தை பேசினாலும் பிறகு தமிழ் பேசும்போது அயல் மொழியை கலந்து தமிழை தள்ளாட விடுவார்கள். ஆனால் 11 ஆம் வகுப்பு முடித்து விட்டு ஆங்கிலத்தில் சரளமாகவும் பிறகு தமிழ் பேசுகையில் அயல் மொழி கலக்காது செந்தமிழ் நடையோடு பேசி வியாபாரம் செய்து வருபவர்தான் 80 வயது நாகப்பன் தாத்தா.
கரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிகள் வகுப்பு முடிந்து மாணவர்கள் கேண்டீனில் குவிய தொடங்கினர். கூட்டத்தில் எளியத் தோற்றத்தில் அழுக்கு சட்டை வேட்டியுடன் பையை தூக்கிகொண்டு உள்ளே நுழைந்தார் 80 வயது முதியவர் நாகப்பன் தாத்தா .

Hello Girls,Wear these earrings, and you will look like an angel. என்றபடி சத்தப்போட்டார்.
அனைவரும் சற்று திகைத்தவாறு நின்று பார்த்தனர். மீண்டும் அந்த முதியவர் வாருங்கள் சகோதரிகளே என்னிடம் அழகான முத்து போன்ற காதணி உள்ளது இதை அணிந்தால் வானுலக தேவதை போல இருப்பீர்கள் என்றார்.
மேலும் மாணவர்களின் கவனத்தை ஈர்த்த அந்த தாத்தாவிடம் வந்த சில மாணவர்கள் தோடு,கிளிப், ஹேர்பின், ஸ்டிக்கர் என அவர் வைத்திருக்கும் பொருட்களை பார்வையிட்டு கொண்டிருந்தனர்.

This entire pack of hairpins costs less than the food you eat! என்று மாடர்ன் ஸ்லாங்கில் பேச சிரித்து கொண்டே சில மாணவர்களும் வாங்கி சென்றனர்.
அதற்கு மேலும் அவர் Thank you for your visit, it means a lot to me என்று ஒவ்வொருவரிடமும் தெரிவித்து கொண்டார்.
தாத்தா உங்களுக்கு இங்கிலிஷ் தெரியுமா என்று கேட்க.
Yah i know என்று முதியவர் சொல்லி முடிக்க
உங்கள் பெயர் என்ன எந்த ஊர் நீங்க?.. எப்படி ஆங்கிலம் இவ்வளவு சூப்பரா பேசுறீங்க என்ற கேள்விக் கேட்டபொழுது
என் பெயர் நாகப்பன். என்னோட ஊரு பரமக்குடி நான் 11 வகுப்பு வர படிச்சுருக்கேன்.
இன்று வரை டிக்ஸ்னரி படிக்கிற பழக்கம் இருக்கு. கெடைக்குற கொஞ்ச காசுல இங்கிலிஷ் நியூஸ் பேப்பர் வாங்கி டெய்லியும் படிப்பேன். Whenever I come across a word I don’t know, I look it up in the dictionary... என்று சரளமான ஆங்கிலத்தில் பேசியபடி பொருட்களை வாங்கும் மாணவர்களிடம் what is your sweet Name என்று கேட்டதோடு பெயர் சொல்லும் அனைவரின் பெயரின் பொருளையும் அழகாக சொல்லி கவர்ந்திழுத்தார்.

இந்த இங்கிலீஸ் கஷ்டம் கஷ்டம்னு சொல்லுவாங்க நம்பிராதிய ரொம்ப ஈசி.
30 வருசமா இந்த தொழில் பாக்குறேன் கொஞ்ச வருஷம் மதுரை ல ஒரு கண்காட்சில வேலை பாத்தேன் அப்புறம் இந்த தொழிலுக்கே வந்துட்டேன்.
வீடை பத்தி கேக்குற சொல்றேன். I have no wife,I have no Dad & Mom,I have nobody Now என்று கூறுகையில் சற்று புன்னகைத்த வாறு நமக்கு LM ஓ AM ஓ இல்லையப்பா என்றார்.
என்ன வென்று குழம்பிய பிறகு அவரே சொன்னார் உங்களுக்கு தெரியாததா Love Marriage, Arranged Marriage என்று கூறியவுடன் சற்று சிரிப்பலை எழுந்தது.

புரோக்கர் பார்த்து குடுத்த பொண்ணு அவங்களுக்கு நோய் இருக்குனு சொல்லல கொஞ்ச நாளுலியே அவங்க இறந்துட்டாங்க. நானும் அடுத்து கல்யாணம் கட்டிக்கல.வீட்டில முன்னாடியே அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க.
அப்புறம் எனக்கு யாரும் இல்லைல. என்ன மட்டும் என்னால இந்த தொழில வச்சு கவனிச்சுக்க முடியுது...so that's all I enjoy this work while travelling from place to place and exploring different towns.
If God blesses us , we will meet again.
என்று கூறி நடந்தார்
உங்க AIM என்ன என்ற கேள்விக்கு..Haha I don’t want to be stuck in one place, whether rich or poor. I want my journey to continue endlessly...
Then another one is I want to be the reason for someone's smile. என்றார் நாகப்பன் தாத்தா.

அவர் விற்கும் ஸ்டிக்கரில் கூட இவருக்கு தோன்றும் Quotes-களை எழுதி கடையில் குடுத்து படம் வைத்து தயாரித்து வாங்கி ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறார்.
என்னதான் எளிய உடையில் வந்த முதியவராய் இருந்தாலும் பத்து நிமிடத்தில் வாழ்க்கை தத்துவத்தை கற்றுகொடுத்து சென்றார்..இதுபோலும் நிறைய பொருட்கள் விற்பவர்களில் கூட நாகப்பன் தாத்தாவின் ஆளுமை இருக்கலாம் முகம் சுழிக்காமல் அவர்களிடம் உரையாட வேண்டும் என்பது நாகப்பன் தாத்தா தந்த பாடம்.



















