India - Pakistan : `பாகிஸ்தானின் சீக்கிய தலம் மீது தாக்குதலா?’ - மறுத்த இந்திய அரசு | Fact check
பாகிஸ்தானில் உள்ள சீக்கிய புனித தலமான நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள், 26 பேரை சுட்டுக்கொன்ற பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக "ஆப்ரேஷன் சிந்தூரி” என்னும் பெயரில் மே 7ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து மே 8 மற்றும் மே 9 தேதியின் இடைப்பட்ட இரவில் திடீரென பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டபோது இந்திய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்தன. நேற்று இரவு பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் எல்லை முழுவதும் டிரோன்கள் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலையும் இந்திய ராணுவம் முறியடிக்கப்பட்டதாக கூறியது.
सोशल मीडिया पर साझा किए गए एक वीडियो में दावा किया जा रहा है कि भारत ने ननकाना साहिब गुरुद्वारे पर ड्रोन हमला किया है। #PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2025
❌यह दावा पूरी तरह फर्जी है।
▶️ सांप्रदायिक विद्वेष फैलाने के लिए ऐसे कंटेन्ट बनाए जाते हैं।
▶️ कृपया सतर्क रहें। ऐसे वीडियो फॉरवर्ड न करें।… pic.twitter.com/59omIJx9r6
இரு நாடுகள் இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்தியாவில் விமான போக்குவரத்து கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இயங்கி வருகிறது. மே 15 ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள நான்கனா சாஹிப் குருத்வாரா என்ற சீக்கிய புனித தலத்தை மீது இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
சமூக வலைதளங்களை பகிரப்பட்ட ஒரு காணொளியில் நான்கனா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் ”முற்றிலும் போலியானது” என்று PIB உண்மை சரிபார்ப்பு பிரிவு தனது அதிகாரப்பூர்வ வலைப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வகுப்புவாத வெறுப்பை உருவாக்கும் நோக்கில் இது போன்ற தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவின் மின் கட்டமைப்பு செயலிழந்துவிட்டதாகவும் மும்பை டெல்லி விமான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் போலியானவை என்று அரசாங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.