செய்திகள் :

Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?

post image

ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.

இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது...

"ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம்.

கமேனி
கமேனி

அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது.

'அண்ணியார் ஆப்சென்ட்; சுதீஷுடன் ராஜ்ய சபா சீட் மட்டும் ஒப்பந்தம்!' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

திமுகவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்த தேமுதிக, இன்று இரவு 8:30 மணியளவில் திமுகவுடன் ராஜ்ய சபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.சுதீஷ்அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த... மேலும் பார்க்க

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவ... மேலும் பார்க்க

விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை

திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர... மேலும் பார்க்க

”விமர்சித்தவர்களையும் அரவணைத்து கூட்டணி அமைத்திருக்கிறார்”- ஸ்டாலினுக்கு கார்த்தி சிதம்பரம் பாராட்டு

தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, "அ.தி.மு.க முன்பு இருந்த நிலையில் இப்போது இல்லை. ஒரு பெரி... மேலும் பார்க்க

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர... மேலும் பார்க்க