செய்திகள் :

Iran Vs Israel: "என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி"- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி!

post image

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உள்ள ஜெப ஆலயம் சிதைந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடிபாடுகளைப் பார்வையிட பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வந்திருந்தார்.

மோடி - நெதன்யாகு
மோடி - நெதன்யாகு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றதற்கும், உண்மைக்காகக் குரல் கொடுத்ததற்கும் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இஸ்ரேல் மக்களால் பெரிதும் போற்றப்படுபவர். அவருடனான உரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்தது. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டின் கொடுங்கோன்மை ஆட்சியை தூக்கியெறியும் காலம் நெருங்கிவிட்டது. அந்த மாற்றம் நிகழும்போது, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானிய மக்களுக்குத் துணையாக இருக்கும்." என்றார்.

இதற்கிடையில், நேற்று மாலை ஈரான் மீண்டும் பல ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இதில் மூன்று ஏவுகணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாகத் தடுத்து அழிக்கப்பட்டன.

தொடர் அச்சுறுத்தல் காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொபைல் போன்களுக்கு அனுப்பப்படும் எச்சரிக்கை செய்தியைப் பின்பற்றி, மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மறு உத்தரவு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பார்வை!

'உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....' இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான "The United Fruit Co." என்றப் புகழ்பெற்ற கவிதை நூல... மேலும் பார்க்க

`சமூகநீதி என்றாலே பிரதமர் மோடி தான்; திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை'- அன்புமணி

"சமூக நீதி என்றாலே மோடிதான். திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தம் இல்லை...." என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாதாஸ் கடுமையாக பேசியதற்கு காரணம், அவருடைய முந்தைய பேச்சால் அதிருப்தி அடைந்துள்ள பாஜக-வினர... மேலும் பார்க்க

Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடிவிட்டதாக ஈரானி... மேலும் பார்க்க

நெருங்கும் டெட்லைன்; காத்திருக்கும் விஜய்; இழுத்தடிக்கும் காங்கிரஸ்! - என்ன செய்யப் போகிறது திமுக?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் இழுபறி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி முடிவை அறிவிக்க காங்கிரஸூக்கு திமுக கொடுத்திருக்கும் டெட்லைனும் முடிவடைய போகிறது. காங்கிரஸ் இழுத்தடிக்கிறது. அறிவாலயம்... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!

“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர... மேலும் பார்க்க