செய்திகள் :

Jailer 2: "அனிருத் திருமணம்; ரஜினி சாரின் தத்துவம்!" - பியார்ன் சுர்ராவோ ஷேரிங்ஸ்

post image

'ஜெயிலர் 2' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளி வருகிறது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

Jailer 2 - Rajinikanth
Jailer 2 - Rajinikanth

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் புட்டாபு கேங்கில் ஒருவராக வரும் பியார்ன் சுர்ராவோவை பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், ''ரஜினி சார் ஜாலியான மனிதர். அப்படிப்பட்ட ஒரு லெஜண்டை நேரில் சந்தித்ததே என்னை மிகப்பெரிய ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர வைக்கிறது.

படப்பிடிப்பு இடைவேளையில் நிறைய தத்துவங்கள் சார்ந்து பேசுவார். நிறைய ஜோக்குகளும் சொல்வார். தத்துவங்கள், ஆன்மிகம் ஆகியவை நான் எப்போதும் எக்ஸ்ப்ளோர் பண்ண விரும்பிய விஷயங்கள்.

ரஜினி சார் மிகவும் அனுபவம் வாய்ந்த மனிதர்களில் ஒருவர். அவரே இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் பகிர்ந்தார். அதெல்லாம் மிகவும் சிறப்பான உரையாடல்கள். ஷூட்டிங் ஸ்பாட் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

Bjorn Surrao
Bjorn Surrao

எங்களுடைய புட்டாபு கேங்கும் எப்போதும் ஜாலியாக இருப்போம். அதேபோல யோகி பாபு சாருக்கென ஒரு கேங் இருக்கிறது. அவர்களும் செம ஃபன். மூர்த்தி அண்ணன் கேரக்டருக்கு மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மூர்த்தி அண்ணன் கதாபாத்திர வடிவமைப்பும் ரொம்பவே கச்சிதமாக அமைந்துவிட்டது.

தலைவர் ரஜினி சாரும் மூர்த்தி அண்ணனின் காமெடியை ரொம்பவே என்ஜாய் பண்ணி ரசித்தார்" என்றவர், அனிருத் திருமணம் குறித்து, "அவருக்காக நான் எப்போதுமே ரொம்ப சந்தோஷப்படுவேன்.

அவருக்கு கிடைத்திருக்கும் உயரத்திற்கு அவர் உரித்தானவர். அனிருத்தும் நானும் நீண்ட நாள்களாக ஒன்றாகப் பயணித்து வருகிறோம். கல்லூரி காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரே இசைக்குழுவில் இருந்தோம். அனிருத்தே ஒரு சின்ன தலைவர்தான்! இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அனிருத்தும் காவ்யாவும் என்னுடைய நண்பர்கள்தான்!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Haiku Review: இரண்டு காதல்கள் கற்றுத்தரும் பாடம் - தலைப்பைப் போலவே வசீகரிக்கிறதா இந்தக் காதல் கதை?

சென்னையில் ஆட்டோமொபைல் வரைகலை நிறுவனம் ஒன்றில் பணியிலிருக்கிறார் மனோகர் (ஏகன்). அங்கே பயிற்சிக்காக இணையும் நிவேதாவுடன் (ஃபெனிமா ஜார்ஜ்) நட்பு ஏற்படுகிறது. இதனிடையே மனோகரின் கல்லூரிக்கால வாழ்க்கையும் ந... மேலும் பார்க்க

'வியந்து பார்த்த ஹீரோவுடன், இப்போது இணைந்து நடிப்பதென்பது..!' - ஹிருத்திக் ரோஷன் குறித்து மிர்னா

'ஜெயிலர் -1' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக 'சுவேதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவர் மிர்னா. கடந்த வாரம் வெளியான 'ஜெயிலர் -2'-விலும் நடித்திருக்கிறார். இந்நிலையி... மேலும் பார்க்க

விக்ரம் வேதா : `இருவரும் நமக்கு உணர்த்திச் செல்வது என்ன?' | புதிர்களின் பின்னல்! | `சினி'ஸ்கோப் 35

`சினி'ஸ்கோப் 35விக்ரம் வேதா : புதிர்களின் பின்னல்!விக்ரம், நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்து கொள்கிறவனாகவும், புத்திசாலியாகவும் இருக்கிறான். அவன் ஒரு பைக் ஆர்வலனும் கூட! அவனிடமிருக்கும் பழைய பைக் ஒன்றின... மேலும் பார்க்க

Haiku: "ஹிப் ஹாப் ஆதி அண்ணா எங்களை பாட வச்ச அந்த மொமன்ட்..!" - அதிர்ச்சி அருண் பேட்டி

ஏகன், ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் என இளம் பட்டாளங்கள் நடித்திருக்கும் 'ஹைக்கூ' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக நடிகர் அதிர்ச்சி அருணைப் பேட்டி கண்டோம். Haiku Movie'ஹைக்... மேலும் பார்க்க

``'பாட்ஷா படத்துல ஆட்டோக்காரன் பாடலை முதல்ல பாடியது கிருஷ்ணராஜ் தான்!" - இயக்குநர் நாஞ்சில் அன்பழகன்

இசையமைப்பாளர் தேவா மறைந்த அடுத்த சில தினங்களிலேயே அவரது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகர் கிருஷ்ணராஜும் மரணமடைந்திருப்பது, தமிழ்த் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இன்று காலை மரணமடைந்த ... மேலும் பார்க்க

’தஞ்சாவூரு மண்ணெடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்... தமிழ்த் திரையிசைக்கு மேலும் ஒரு சோகம்

பிரபல தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலமானார், அவருக்கு வயது 75.சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே வேம்படிதாளம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்.சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம்... மேலும் பார்க்க