செய்திகள் :

Jana Nayagan: "ஒரே தளபதியோட இந்தக் கடைசி ஆட்டத்தை, FDFS-ஆ பார்க்க போறேன்!" - அர்ச்சனா கால்பத்தி | Live Updates

post image

'பகவந்த் கேசரி' திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி பதிவு

"இத்தனை வருடங்களாக ரசிகர்களுக்கு எண்ணற்ற மறக்க முடியாத தருணங்களை வழங்கியிருக்கிறீர்கள் விஜய் சார். உங்கள் இந்த அற்புதமான பயணத்தில் ஜனநாயகன் திரைப்படம் மற்றொரு பொக்கிஷமான மைல்கல்லாக அமையும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

Anil Ravipudi - Bhagavanth Kesari
Anil Ravipudi - Bhagavanth Kesari

'தளபதி'யிலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வரை, 'ஜனநாயகன்' என்ற பெயருக்கு நீங்கள் முழுமையாக வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள்!

கே.வி.என் ஃபிலிம்ஸ், சகோதரர் எச். வினோத் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இந்தப் படம் வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று, அதற்குத் தகுதியான அனைத்து அன்பையும் பெற வேண்டுகிறேன்."

அர்ச்சனா கல்பாத்தி பதிவு

AGS என்டர்டெயின்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி பதிவு

"(துப்பாக்கி) படத்துக்கு அப்புறம் பல வருஷம் கழிச்சு, எந்தச் சூழ்நிலையிலும் மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்குன படம் இதுதான்! எனக்கு எப்பவும் பிடிச்ச ஒரே தளபதியோட இந்தக் கடைசி ஆட்டத்தை, AGS தியேட்டர்ல கடைசி First Day First Show (FDFS)-ஆ பார்க்க போறேன்!

இதைச் சாத்தியமாக்கின ஜெகதீஷ் அவர்களுக்கு ரொம்ப நன்றி! நாளைக்கு தியேட்டர்ல கொண்டாட்டம் வேற லெவல்ல இருக்கப்போகுது!

அர்ச்சனா கல்பாத்தி - விஜய்
அர்ச்சனா கல்பாத்தி - விஜய்

ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் போஸ்டர், முதல் பாடல், ஆல்பத்தில் நீங்கள் பாடிய பாடல், ஆடியோ லான்ச், (இன்றும் நான் கேட்கும்) உங்களின் 'குட்டி ஸ்டோரி'கள், டிரெய்லர் மற்றும் ஒவ்வொரு சாதனைகளுக்காகவும் ட்விட்டரில் நடந்த ரசிகர்களின் சண்டைகள் முதல் அந்தக் கடைசி முதல் நாள் முதல் காட்சி (FDFS) தருணம் வரை...

எனது சிறுவயது முதல் வளர்ந்த காலம் வரை உங்களின் ஒவ்வொரு திரைப்படத்தையும் நான் எப்போதுமே மனதிற்கு நெருக்கமாகப் போற்றுவேன்.

எங்களை மகிழ்வித்ததற்கும், எங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தந்ததற்கும், எங்களுக்கு ஊக்கமாக இருந்ததற்கும், இப்போது எங்களை வழிநடத்துவதற்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். நமது தளபதியை, நமது மாண்புமிகு முதலமைச்சரை, நமது ஜனநாயகனை இன்று கொண்டாடுவதற்கான நேரம் வந்துவிட்டது! நாம் அனைவரும் இதை வரலாறாக்கக் கொண்டாடுவோம்!''

கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருந்தது.

ஆனால், சென்சார் பிரச்னைகளால் திரைப்பட ரிலீஸ் தள்ளிச் சென்றுகொண்டே இருந்தது.

இப்போது அனைத்துப் பிரச்னையும் முடிந்து, இன்று (ஜூலை 23) நடிகரும் முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்பட ரிலீஸ் குறித்த அனைத்து அப்டேட்களையும் இங்கே காணலாம்!

Vishwanath & Sons: "குழந்தைகள் என் காமெடி காட்சிகளைக் கொண்டாடும்போது..." - நெகிழும் மமிதா பைஜூ

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Vishwanath & Sons வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர்... மேலும் பார்க்க

Paris Cafe: `பாரிஸ் நகரில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடத்தினோம்' - குரு சோமசுந்தரம்

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Paris Cafe: ``நம் யாராலும் தவிர்க்க முடியாத முக்கியமான விஷயம்" - நடிகை அனுமோல் பேச்சு

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள 'பாரிஸ் கபே' திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறத... மேலும் பார்க்க

Arun Vijay: "பலத்தோடு மீண்டும் வருவேன்" - 'இருளன்' படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு ஏற்பட்ட காயம்

நடிகர் அருண் விஜய், இப்போது இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'இருளன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. எப்போதுமே அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளுக்குச் சி... மேலும் பார்க்க

பருத்திவீரன் : தெற்கின் வெக்கை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 16

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 16பருத்திவீரன்வெட்டுக்குத்துக்குப் பயப்படாத, சிறைக்குச் செல்ல அஞ... மேலும் பார்க்க

Sai Abhyankar: "கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைப்பது என் கனவு" - சாய் அபயங்கர்

சுயாதீன இசைக்கலைஞராகத் தனது கரியரைத் தொடங்கிய சாய் அபயங்கர், இன்று சென்சேஷனல் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார். Sai Abhyankar'இந்தியா டுடே' ஊடகத்தின் தமிழ்ப் பதிப்புத் தொடக்க விழாவில் கலந்துகொண்டவ... மேலும் பார்க்க