செய்திகள் :

Kalidas 2: "இத்தனை வருடங்கள் நடிக்காமல் இருந்தது ஏன்?'' - பதில் தந்த 'பூவே உனக்காக' சங்கீதா

post image

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள்.

Kalidas 2
Kalidas 2

இயக்குநர் ஶ்ரீ செந்தில் இயக்கியிருக்கும் இந்த இரண்டாம் பாகத்தில் பவானி ஶ்ரீ, 'பூவே உனக்காக' சங்கீதா, அபர்ணதி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகை சங்கீதா பேசுகையில், "இங்கு எல்லோரையும்விட நான்தான் சந்தோஷமாக இருக்கேன். ஏன்னா, எனக்கு ரொம்ப பிடிச்ச தமிழ் சினிமாவுல 25 வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன்.

இத்தனை வருஷம் வீட்டுல கம்போர்டாக இருந்து பழகிட்டேன். ஆனா, அதுல இருந்து வெளில வரணும். மீண்டும் நடிக்க வரும்போது, தயாரிப்பாளர்கள் எனக்கு எவ்வித அசௌகரியங்களையும் ஏற்படுத்தல.

இந்தப் படத்தோட போட்டோஷூட்டுக்கு முதல் முறையாக வரும்போது இறுக்கமாகவேதான் வந்தேன்.

'Poove Unakaaga' Sangeetha
'Poove Unakaaga' Sangeetha

எல்லோருமே எனக்கு சீனியர்ஸாகதான் தெரிவாங்க. படத்தின் லாஸ்ட் ஷாட் எடுக்கும்போது, பரத், 'எனக்கு பஸ்ஸுக்கு டைம் ஆகுது'னு சொல்லிட்டு இருந்தாரு, நான் பஸ்ஸுக்கு லேட் ஆகுதானு சந்தேகத்தோட கேட்டேன்.

அவர், 'ஆமா, எனக்கு நாளைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கு. பஸ்ல போய் கோயம்பேடுல இறங்கி, வீட்டுக்குப் போயிடுவேன்'னு சொன்னாரு. அந்தளவுக்கு டவுன் டு எர்த் பர்சன் அவர். எனக்கு இது முதல் படம் மாதிரியான ஃபீல்தான் கொடுக்குது." என்றார்.

இவரிடம் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கான காரணத்தை தொகுப்பாளர் கேட்டார். இதற்கு பதில் தந்தவர், "நான் எங்கேயும் போகல. நான் சினிமாவுலதான் இருந்தேன். என் கணவர் சினிமாவுல இருந்ததுனால எனக்கும் சினிமாவை விட்டு போன மாதிரி ஃபீலிங் இல்ல. கொஞ்சம் வீட்டு வேலைகள் அதிகமாக இருந்ததுனால, லேட்டாக வந்திருக்கேன்." என்றார்.

தேன் சுடரே: ''அந்த வார்த்தைக்குப் பெரிய பஞ்சாயத்தாச்சு" - பாடலாசிரியர் மோகன் ராஜன் | வரித்துணையே 11

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" - பரத் வருத்தம்

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2இயக்குநர் ஶ்ரீ செந்தில... மேலும் பார்க்க

மணிரத்னம்: `அன்று சொன்னதை, இன்று செய்தார்!' - விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

மணிரத்னம் இயக்கியிருந்த 'தக் லைஃப்' திரைப்படம் கடந்தாண்டு திரைக்கு வந்திருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரத்தில் கிசு கிச... மேலும் பார்க்க

Youth Review: 'கலகல காதல்; குடும்ப எமோஷன்; ஆனாலும்...' - எப்படி இருக்கு 2கே கிட்ஸ்களின் 'யூத்'?

10ம்வகுப்புபடிக்கும்பிரவீன்(கென்கருணாஸ்)பொதுத்தேர்வில்அனைத்துப்பாடங்களிலும்ஜெஸ்ட்பாஸ்மட்டுமேபெறுகிறார்.பிரவீனுக்குமிகவும்செல்லம்தந்துவளர்க்கும்தாயார்சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன்பாஸ் ஆகிவிட்ட விஷயம் ம... மேலும் பார்க்க