செய்திகள் :

Kerala: 'பினராயி விஜயன் 3.0' கனவு தகர்ந்தது; கேரளத்தை மையம்கொண்ட காங்கிரஸ் புயல்!

post image

கேரளாவில் கடந்த மாதம் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் வெற்றிப் புயல் கேரளத்தில் மையம்கொண்டுள்ளது எனக்கூறும் அளவுக்கு அக்கட்சி முன்னிலையில் உள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 71 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கும். அதே சமயம் தற்போதைய நிலவரப்படி 89 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் முன்னிலை வகித்து வருகிறது.

சி.பி.எம் கூட்டணியான எல்.டி.எஃப் 48 தொகுதிகளிலும், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அமைச்சர்கள் பெரும்பாலானோர் பின்னடைவைச் சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சி.பி.எம் கோட்டையாகக் கருதப்படும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவைச் சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்
காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்

அமைச்சர் ராஜன், பாலகோபால், சஜி செறியான் உள்ளிட்ட சிலர் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, வாசவன், பிந்து உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பெரும்பாலானோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் தொகுதியில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் கே.சுரேந்திரன் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். பின்னர் பின்னிலை அடையத்தொடங்கினார். திருவனந்தபுரம் மாவட்டம் நேமம் தொகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் உள்ளார்.

ராஜீவ் சந்திரசேகர்
ராஜீவ் சந்திரசேகர்

பினராயி விஜயன் 3.0 ஆட்சி அமைப்போம் என சி.பி.எம் கூறி வந்தது. அதேசமயம் நூறு ப்ளஸ் சீட்டுகளில் வெற்றிபெறாமல் இருந்தால் அரசியல் வனவாசம் சென்றுவிடுவேன் எனக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்து வந்தார்.

வழக்கமாக ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் கேரளத்தில் கடந்த முறை மட்டுமே தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. இந்த முறை பழையபடி மீண்டும் ஆட்சிமாற்றத்துக்கு வித்திட்டுள்ளனர் கேரள மக்கள்.

கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்?

திமுக, காங்கிரஸ் இரு கட்சியும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து வந்தது. நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் கூட்டணியாகப் போட்டியிட்டனர். அதன்படி கும்பகோணம் மா... மேலும் பார்க்க

திமுக - அதிமுக கூட்டணி? "பாஜக-வைத் தூண்டும் அதிமுக; துரோகத்தையும் மீறி நாங்கள்.."- கலாநிதி வீராசாமி

'என்னது திமுகவும், அதிமுகவும் கூட்டணியா?' என்பதுதான் நேற்றைய இரவு முதல் இன்று காலை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட 'ஹாட்' டாபிக். "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை திமுக ஆறு மாதங்கள... மேலும் பார்க்க

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்... மேலும் பார்க்க