செய்திகள் :

Lingam Review: பரபரக்கும் 80-ஸ் கேங்ஸ்டர் வெப் சீரிஸ் - நம்மை கட்டிப் போடுகிறதா இந்த `லிங்கம்'?

post image

கன்னியாகுமரியில் வசித்து வரும் லிங்கத்திற்கு (கதிர்) போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. கபடி போட்டிகளில் லிங்கத்தின் டீம் சொல்லியடிக்கும் கில்லியாகவும் இருக்கிறது. அப்படி ஆட்டம் காண்பிக்கும் அதிரடி கபடி வீரராகவும் இருக்கிறார் லிங்கம். ஒரு நாள், லிங்கத்தின் டீம் ஒரு கபடி போட்டியில் கலந்து கொள்கிறது. அங்கு இரு அணிகளுக்கும் பரபரப்பான போட்டி நடந்து கொண்டிருக்கையில், எதிரணியினர் மீது பகைக் கொண்ட கும்பல் ஒன்று அங்கு கலவரத்தை நிகழ்த்துகிறது.

‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review
‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review

அந்த கலவரத்தில் எதிரணியின் முக்கிய வீரர் கொல்லப்படுகிறார். கபடி போட்டியில் ஏற்பட்ட மோதல் காரணமாக லிங்கம், அவரைக் கொலை செய்துவிட்டார் எனப் பழி விழுகிறது. இதனால் சிறைக்குச் செல்லும் லிங்கத்தின் வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதை 8 எபிசோடுகளில் சொல்கிறது இயக்குநர் லக்ஷ்மி சரவணக்குமாரின் 'லிங்கம்'.

காதல், நடுக்கம், பெருங்கோபம், வஞ்சம் உள்ளிட்ட எமோஷன்கள் கொண்டவராகக் கதிர் மைதானத்திற்குள் ரெய்டு இறங்கியிருக்கிறார். தொடக்கப் பகுதிகளில் நமக்கு பரிச்சயமான கதிர் வந்து போனாலும், தீவிரமான காட்சிகளில் 'சூப்பர் ரெய்டு' காட்டி பாயிண்ட்ஸை அள்ளுகிறார். அதே கபடி வீரராக, லிங்கத்தின் நண்பராக நடிகர் ஷாகிர். பெரும்பாலான இடங்களில் துருத்தலில்லாத நடிப்பைத் தந்து போனாலும், சில சீரியஸ் இடங்களில் செயற்கைத்தடங்களையும் பதித்துப் போயிருக்கிறார். 

‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review
‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review

போஸ் வெங்கட்டுக்காகவே எழுதப்பட்ட குணச்சித்திர கதாபாத்திரம்... அதற்குத் தன்னுடைய பொறுப்பான டியூட்டியைத் தந்திருக்கிறார். நாயகிகளாக திவ்யபாரதி, பூர்ணிமா ரவி ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை. இவர்களைத் தாண்டி, சந்திரகுமார், பிரசாந்த் பாண்டியராஜ், சண்முகம் முத்துசாமி, திலீபன், காளி வெங்கட்  ஆகியோர் அவரவர் பங்களிப்பை இந்த சீரிஸுக்கு நல்கியிருக்கிறார்கள்.

கடலை ஒட்டிய நிலப்பரப்பு, உயரமான தேவாலயங்கள், சிறைகளின் குறுகிய அறைகள் ஆகியவற்றோடு லிங்கத்தின் வன்முறைப் பக்கத்தையும் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். அந்த விஷுவல்களில் ஒரு கேங்ஸ்டர் சினிமாவுக்கு தேவையான 'டச்'களையும் இணைத்திருக்கிறார். முதல் மூன்று எபிசோடுகளை படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பின்னிய விதத்திற்குப் பாராட்டுகள்! ஆனால், அதன் பிறகு நிதானமில்லாமல் ஓடும் எபிசோடுகளை ஒரே கோட்டில் அடுக்காமல் விட்டிருக்கிறார். இந்த வெப் சீரிஸில் பாடல்களையும் காட்சிகளோடு இணைத்திருக்கிறார் இசையமைப்பாளர் டோனி ப்ரிட்டோ. ஆனால், அதில் நினைவில் தங்கும் புதுமை டச் இல்லை.

‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review
‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review

பின்னணி இசையில் சண்டைக் காட்சிகளின் மாஸ் தன்மைக்கு நெருப்பூட்டியிருக்கிறார். ஆனால், நிறைய இடங்களில் தேவைப்படும் அந்தப் பரபர இசை மிஸ்ஸிங்!

90-களில் கட்டப்பட்ட வீடுகள், அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பொருட்கள் என கதையின் பீரியட் தன்மைக்கு, கலை இயக்குநர்கள் குழுவும், ஆடை வடிவமைப்பாளர்கள் குழுவும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறது.

காவல் அதிகாரியாக வேண்டும் என்கிற லட்சியத்தோடு இருக்கும் ஒருவனின் வாழ்க்கை, சூழலால் எப்படி தடம் புரள்கிறது என்கிற கதையைக் காதல், ஆக்ஷன், எமோஷன் கலந்த வெப் சீரிஸாக எட்டு எபிசோடுகளில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மி சரவணக்குமார். ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த `லிங்கம்' கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்த சீரிஸ்.
‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review
‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review

லிங்கத்தின் லட்சியம், அவருடைய காதல் பக்கம், அவருக்குக் கபடி மீதுள்ள பிணைப்பு, அவர் மீது சுமத்தப்படும் பழி, அதனால் அவர் சிறைக்குச் செல்வது போன்றவற்றை விவரித்தபடி விரிகின்றன இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிசொடுகள். சிறைக்குள் லிங்கம் எதிர்கொள்ளும் விஷயங்கள் போன்றவை நல்ல டீடைலிங் தந்து அழுத்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. இந்த  எபிசோடுகளில் நடிகர்களின் பங்களிப்பு, காட்சிகள் அரங்கேற்றப்பட்ட விதம் என அனைத்திலும் கச்சிதம் வெளிப்பட்டிருப்பதால் 'அடி தூள்' சொல்லவும் வைக்கிறது! 

ஆனால், இதற்குப் பிறகான எபிசோடுகளில் லிங்கத்தின் வாழ்க்கையைப் போல திரைக்கதையும் தடுமாறுகிறது. லிங்கம் உயிராய் நேசித்த போலீஸ் வேலை அவருடைய கைகளிலிருந்து நழுவியதும், அவருக்குள் எப்படியான தாக்கம் உண்டானது என்பதை விவரிக்காமல் அவரின் அடுத்தடுத்த கிரே பக்கங்களுக்கே சீரிஸ் நகர்கிறது. கதிர் கதாபாத்திரத்திற்கும், சந்திரகுமார் கதாபாத்திரத்திற்கும் எப்படி இதுபோன்ற இணக்கம் உருவானது என்பதற்கான பதிலில் ஆழமில்லை. இதற்கான பின்கதையும் முழுமையாகச் சொல்லப்படாததால், இடைப்பட்ட எபிசோடுகள் நம்மை சீரிஸிலிருந்து அந்நியப்படுத்துகின்றன. 

‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review
‘லிங்கம்' விமர்சனம் |Lingam Review

அதோடு, கதையின் மையத்திற்குத் தொடர்பே இல்லாமல் காதல் எபிசோடுகளுக்கு டூர் செல்வதையும் தவிர்த்திருக்கலாம். இடைப்பட்ட மற்றும் இறுதி எபிசோடுகள் டெம்ப்ளேட் கேங்ஸ்டர் சினிமாவுக்கான இலக்கணத்துக்குள் அடைப்பட்டிருக்கின்றன. அதோடு, பல லாஜிக் கேள்விகளுக்கும் கிளம்பிப் போயிருக்கிறார் 'லிங்கம்'.

பிற்பாதியில் தடம் மாறிப்போனாலும், கேங்ஸ்டர் சினிமாவுக்கான நல்லதொரு தொடக்கமும் த்ரில்லும் இருக்கும் 'லிங்க'த்தை நிச்சயம் பார்க்கலாம்.

Train: ``விஜய் சேதுபதி சார் கொடுத்த ஆதரவே காரணம்.!" - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க

"விஜய் படத்தில் விஜய்யை மட்டும்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்; அதை மாற்றியது இந்த இருவர்தான்" - அமீர்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'Train'. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் மற்றும்... மேலும் பார்க்க

Train: ``'விடுதலை' படத்திலிருந்தே விஜய் சேதுபதி எங்களில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார்" - வெற்றிமாறன்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க

Train: ``கடந்த 6 வருஷத்துல மிஷ்கின் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள் ஏராளம்" - இயக்குநர் ராம்

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்த... மேலும் பார்க்க

Train: ``இவரைப் பார்த்தால் சைக்கோ மாதிரி இருக்கும்" - விஜய் சேதுபதி கலகல பேச்சு!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. ரயிலில் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு 'டார்க் த்ரி... மேலும் பார்க்க

Anbe Diana: ``நான் இந்த இடத்திற்கு வரக் காரணமாய் இருந்த தனுஷ் சாருக்கு நன்றி" - ரம்யா ரங்கநாதன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க