செய்திகள் :

Man Eater: கூண்டுக்குள் சிக்கிய ஆட்கொல்லி புலி; முடிவுக்கு வந்த ஒரு மாத போராட்டம்! - அடுத்து என்ன?

post image

நீலகிரி மாவட்டம்,` கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட லார்ஸ்டன் மற்றும் மஞ்சுஸ்ரீ எஸ்டேட் பகுதிகளில் நடமாடி வந்த ஆட்கொல்லி புலி அடுத்தடுத்து இரண்டு மனிதர்களைத் தாக்கி கொன்றது. ஆகஸ்ட் 9- ம் தேதி பாலகிருஷ்ணன் (58) என்பவர் வீட்டிற்கு அருகில் குடிநீர் குழாய் சரிசெய்ய சென்ற போது புலி தாக்கி கொல்லப்பட்டார். ஆகஸ்ட் 21- ம் தேதி விச்சந்திரன் என்ற மற்றொரு தோட்ட தொழிலாளி ஒருவரையும் அதே புலி தாக்கி கொன்றது. அடுத்தடுத்து இரண்டு பேரை கொன்றுத் தின்ற புலியை பிடிக்க தீவிர நடவடிக்கை தொடங்கப்பட்டது.

புலியை தேடும் பணி

புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 300 தானியங்கி கேமராக்கள் மற்றும் 3 தெர்மல் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. ஓவேலி காடுகளின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 13 இடங்களில் இரும்பு கூண்டுகள் இறைச்சி மற்றும் ஆடு போன்ற இரைகளுடன் வைக்கப்பட்டன. முதுமலையிலிருந்து 'உதயன்' உள்ளிட்ட 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள், அதிரடிப்படையினர் மற்றும் எலைட் ஃபோர்ஸ் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் கடந்த 28 நாள்களாக புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். புலியைத் தேடும் பணியின் போது, வனத்துறை வைத்த கூண்டுகளில் எதிர்பாராத விதமாக இரண்டு முறை சிறுத்தைகள் சிக்கின. அந்த சிறுத்தைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்துவிட்டு, புலியை தேடும் பணியைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கூண்டில் சிக்கிய புலியின் உடலில் உள்ள கோடுகளை முந்தைய கேமரா பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த கால்நடை மருத்துவக் குழுவினர், 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி என்பதை உறுதி செய்தனர். பிடிபட்ட ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி, பாதுகாப்பான சிறிய கூண்டிற்கு மாற்றி, அதனை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அல்லது வேறு பராமரிப்பு மையத்திற்கு கொண்டு செல்ல வனத்துறை திட்டமிட்டுள்ளது. புலி பிடிபட்டதால் கடந்த ஒரு மாதமாக அச்சத்தில் இருந்த கூடலூர் மற்றும் ஓவேலி பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆட்கொல்லி புலி

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " 8 முதல் 10 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் புலி வேட்டையாட முடியாமல் எளிதான இரையான மனிதர்களைத் தாக்கி வந்தது. புலியின் பற்களில் பாதிப்பு அடைந்துள்ளதா அல்லது உடலில் காயங்கள் உள்ளதா என்பதை அறிய கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிரப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த புலி இனி காடுகளுக்குள் திறந்து விடப்படாது. தற்காலிக பரிசோதனைக்குப் பிறகு பாதுகாப்பான கூண்டில் அடைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அமைச்சர் வன்னிஅரசுடன் ஆய்வுக்கு வந்த கார் டிரைவர்; செல்பி எடுத்தபோது கடித்த மலைப்பாம்பு!

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு பழங்குடியின பகுதியில் இயங்கி வரும் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்வதற்காகவும், காணிப்பழங்குடி... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கம்; மரங்களை இழந்து நிற்கும் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை | Drone புகைப்படங்கள்

மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் - மார்ச் 2025 கீழ் படம் - செப்டம்பர் 2026மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை மேல் படம் -... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பாதுகாக்கப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் கார்கள் சாகசம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழி தேரிப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்புக் கம்பளம் விரித்தாற்போல் செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதுதான் இந்த தேரிக்காடு. தமிழகத்தில் எ... மேலும் பார்க்க

கவனம் பெற்ற பாண்டி மெரினா; மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள்... அகற்றப்பட்ட குப்பைகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று. கடற்கரையின் அழகை ரசிக்கவும், மாலை நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் இங்கு பலரும் வந்து செல்கின்றன... மேலும் பார்க்க

காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதல்; மேட்டுப்பாளையம் ’பாகுபலி’ யானை காயம்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டுயானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான உடல், நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள... மேலும் பார்க்க

Man Eater: சிறுத்தையே சிக்கினாலும்... 20 நாளாகப் போக்கு காட்டும் கூடலூர் ஆட்கொல்லிப் புலி | Photos

ஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்லி புலியை தேடும் வனத்துறைஆட்கொல்ல... மேலும் பார்க்க