செய்திகள் :

Mandaadi: "அவருடைய இந்த வளர்ச்சியை அவர் மதிக்கிறார், அதனால்தான்.!"- சூரி குறித்து வெற்றிமாறன்

post image

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.

ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது.

மண்டாடி

இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "எனக்கு மண்டாடி மிகவும் ஸ்பெஷலான ஒரு படம். ஏன்னென்றால் இப்படத்தின் இயக்குநர் மதிமாறன்.

எனக்கு வெற்றிமாறன் என்று பெயர் வைத்தது மதிமாறனின் அப்பா தான். எனக்கு தகுதி இருந்தால் மட்டுமே பணிபுரிய வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நபர் மதிமாறன். என்னிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

சூரி மாதிரியான ஆட்கள் தான் நாம் எவ்வளவு கடினமான வேலைகள் கொடுத்தாலும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.

ஒரு சில கதாபாத்திரங்கள் மனதளவில் பண்ண வேண்டும் தோன்றும் ஆனால் உடல் அளவில் பண்ண முடியாமல் இருக்கும்.

அதேசமயம் உடல் அளவில் தகுதியாக இருந்தாலும் சில சமயங்களில் மனதளவில் நடிக்க முடியாமல் போய்விடும்.

நடிகர் சூரி
நடிகர் சூரி

ஆனால் மனதளவிலும், உடல் அளவிலும் மிகவும் ஸ்டிராங்காக இருக்கக்கூடிய ஒரு நபர் தான் சூரி.

அவருடைய இந்த வளர்ச்சியை அவர் மதிக்கிறார். அதுதான் இயக்குநர் ஒரு விஷயம் கேட்டால் அதை செய்யக்கூடிய ஆற்றலை சூரிக்கு தருகிறது.

சூரி நீங்கள் கண்டிப்பாக இந்த மாதிரி நிறைய சவாலானக் கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும்" என்று பாராட்டி பேசியிருக்கிறார்.

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம்... மேலும் பார்க்க

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி'ஸ்கோப் 23ஆரண்யகாண்டம்பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை ... மேலும் பார்க்க

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மு... மேலும் பார்க்க

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்... மேலும் பார்க்க

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க