செய்திகள் :

Mirror Writing: கண்ணாடிக்குள் தெரியும் திறமை... நெல்லை மாணவியின் வியக்க வைக்கும் பயணம்!

post image

1330 திருக்குறளையும் எழுதியிருக்கேன்"ன்னு ஒரு ஆறாம் வகுப்பு மாணவி சொன்னா, 'அட... சூப்பரே!'ன்னுதான் தோணும்.

ஆனா, "அதை எல்லாமே மிரர் ரைட்டிங்ல எழுதியிருக்கேன்"ன்னு சொன்ன உடனே ஆச்சர்யம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிடும்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரைச் சேர்ந்த அட்சய லட்சுமி, வயசு சின்னதா இருந்தாலும் வித்தியாசமான திறமையால் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

கண்ணாடியில பார்த்தால்தான் படிக்க முடியும் என்ற அளவுக்கு 1330 திருக்குறளையும் மிரர் ரைட்டிங்கில் எழுதி அசத்தியிருக்கும் இந்த குட்டி திறமையாளருக்கு, இதுதான் ஆரம்பம்.

அட்சய லட்சுமி

கின்னஸ் சாதனை, டாக்டர் ஆகணும் என்ற கனவு, நெல்லையின் பெருமையை உலகத்துக்கு எடுத்துச் செல்லணும் என்ற இலக்கு... இப்படிப் பெரிய பெரிய கனவுகளோட பயணிக்கிற அட்சய லட்சுமி, தன்னோட கதையை நம்மகிட்ட பகிர்ந்துகிட்டாங்க.

"என் பேரு அட்சய லட்சுமி. நான் திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர்ல இருக்குற சங்கர் மேல்நிலைப் பள்ளில ஆறாம் வகுப்பு படிக்கிறேன்.

எங்க வீட்டுல நாங்க நாலு பேர். அம்மா, அப்பா, தம்பி, நான். எங்க வீட்டுல எல்லாரும் என்னோட திறமையை ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. நான் இன்னும் நிறைய சாதிக்கணும்னு எல்லாரும் எப்போதும் உற்சாகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க.

கண்ணாடியில் தெரியும் வார்த்தைகள்

நான் 1330 திருக்குறளையும் மிரர் ரைட்டிங்ல எழுதி முடிச்சிருக்கேன். அதாவது, நான் எழுதுறதை நேரா படிக்க முடியாது. கண்ணாடியில பார்த்தாதான் சரியா படிக்க முடியும்.

இந்தப் பழக்கம் எனக்கு செகண்ட் ஸ்டாண்டர்ட்ல இருந்தே இருக்கு. எங்க அம்மா 1330 திருக்குறளையும் மிரர் ரைட்டிங்ல எழுதி வச்சிருந்தாங்க. அதை பார்த்ததுக்கப்புறம்தான் எனக்கும், "நானும் இப்படியே எழுதணும்"ன்னு ஆசை வந்துச்சு.

ஆரம்பத்துல ரொம்ப குழப்பமா இருக்கும். நார்மல் எழுத்து எது ?மிரர் ரைட்டிங் எதுன்னே புரியாது. சில நேரம் நம்பர்ஸ்கூட மாத்தி எழுதிடுவேன். ஆனா, தினமும் பயிற்சி பண்ண பண்ண அது எனக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு.

1330 திருக்குறளையும் எழுத எனக்கு ரெண்டு வாரம் ஆச்சு. எழுதும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், முடிச்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

குடும்பத்தினருடன் அட்சய லட்சுமி

திருக்குறள் மட்டும் இல்ல... தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம், கம்பராமாயணம்... தமிழ்ல எது கொடுத்தாலும் என்னால மிரர் ரைட்டிங்ல எழுத முடியும்.

எங்க டீச்சர்ஸும், என் ஃபிரண்ட்ஸும் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணுவாங்க. "சூப்பரா எழுதுற... எங்களுக்கும் கத்துக்கொடு!"ன்னு சொல்லும்போது இன்னும் சந்தோஷமா இருக்கும். ஸ்கூலையும் ப்ரைஸ் வாங்கிருக்கேன். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் எம்.எல்.ஏ. என்னை பாராட்டி விருதும் கொடுத்திருக்காங்க.

இப்போ என்னோட பெரிய ஆசை, மிரர் ரைட்டிங்கை வைத்து கின்னஸ் ரெக்கார்ட் பண்ணணும். அதுக்காக தொடர்ந்து பயிற்சி எடுத்துட்டே இருக்கேன்.

படிப்பு மட்டும் இல்ல, ஆரி வொர்க் செய்வேன். பேச்சுப்போட்டி, கவிதை, டிராயிங்... எந்த போட்டி நடந்தாலும் கலந்துக்கணும்னு ரொம்ப ஆசை.

அட்சய லட்சுமி

என்னோட இன்னொரு பெரிய கனவு டாக்டர் ஆகணும் என்பதுதான். அதுக்காக அம்மா இப்பவே நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுக்குறாங்க.

மிரர் ரைட்டிங் மட்டும் இல்ல, நெல்லைக்கு பெருமை சேர்க்குற மாதிரியான ஒரு விஷயத்தையும் செய்யணும்னு ஆசை. அதாவது, முழுக்க முழுக்க நெல் மணிகளை பயன்படுத்தி நெல்லையப்பர் கோவிலோட கட்டமைப்பை உருவாக்கணும்னு ஒரு ஐடியா வச்சிருக்கேன். அது என்னோட அடுத்த பெரிய முயற்சியா இருக்கும்.

எனக்கு CM விஜய் மாமாவை ரொம்ப பிடிக்கும். செகண்ட் ஸ்டாண்டர்ட்ல இருந்தே அவர்கிட்ட என் மிரர் ரைட்டிங்கை எழுதி காட்டி பாராட்டு வாங்கனும்னு ஆசை. அந்த நாள் வந்தா, "அவங்க கிட்ட என்னோட மிரர் ரைட்டிங் எழுதி காட்டுவேன்."

ஒரு கையில் பேனா... மனசு முழுக்க கனவுகள்... அதுதான் அட்சய லட்சுமி. மிரர் ரைட்டிங்கில் கின்னஸ் சாதனை படைக்கணும், டாக்டராகணும், நெல்லையின் பெருமையை உலகத்துக்குக் கொண்டு போகணும் என்று ஒவ்வொரு இலக்கையும் மனசுல சுமந்து பயணிக்கிறார்.

`சங்கிலியில கட்டிப்போட்டு வச்சிருந்தாங்க' தாயின் 23 வருட தவிப்பு; பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த மகன்

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி, பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்த தனது மகனை அவரது தாய் மீட்டு வந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம், கோவையில் அரங்கேறியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த சுந்தரி மற்றும் அவரது கணவர் ... மேலும் பார்க்க

“முடி இல்லைன்னா என்ன? மூளை இருக்கே! முடியும்னு நினைச்சாலே...”- இவர்கள் SURVIVOR-கள் அல்ல WINNER-கள்

சென்னை, அடையாறு புற்றுநோய் மையத்தில் வருடா வருடம் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்தவர்களை ஒன்றுதிரட்டி “Survivor’s reunion” என்ற பெயரில் ஓர் அழகான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2... மேலும் பார்க்க

`உழைச்சா தான் வாழுறதுக்கு பெருமை சாமி' - 76 வயதில் அதிரசம் சுட்டு விற்கும் செல்லாயி பாட்டி!

அதிரசம் சுட்டு வாழ்க்கையை இனிமையாக்கிய செல்லாயி பாட்டியின் கதை!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள பச்சளூர் கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான செல்லாயி பாட்டி, இன்றும் தனது உழைப்பால் பலருக்கும் முன... மேலும் பார்க்க

பள்ளி மாணவர்களுக்கு இலவச சிகிச்சை... சேவையால் மனங்களை வென்ற அம்பாசமுத்திரம் மருத்துவர்!

இன்றைய காலத்தில் மருத்துவம் என்பது பலருக்கு ஒரு தொழிலாக இருக்கலாம். ஆனால் சிலர் மட்டும் அதை ஒரு சேவையாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த இளம் மருத்துவர் டாக்... மேலும் பார்க்க

`அதான் கை, கால் நல்லா இருக்கே!' - வயர் பின்னும் விழிச் சவால் மாற்றுத் திறனாளி ராஜா வைக்கும் கோரிக்கை

திருநெல்வேலி ராமையம்பட்டியைச் சேர்ந்த எஸ். ராஜா பிறவியிலேயே பார்வை சவாலுடைய மாற்றுத் திறனாளி."கண் பார்வை சரியா இல்லன்னா என்ன, அதான் கை, கால் நல்லாதான இருக்கே. 10-ஆம் வகுப்பு வரை மதுரை `மதுரை கல்லூரி ம... மேலும் பார்க்க

'குழந்தைகள் இல்லை... சிரிப்பும் இல்லை...' - அமைதியாகும் மெரினா ராட்டினங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் ஒருகாலத்தில் குழந்தைகளின் சிரிப்பால் சுழன்ற ராட்டினங்கள், இன்று பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மெரினா கடற்கரை, தினமும் ஆயிர... மேலும் பார்க்க