செய்திகள் :

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

post image

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார் தலைமையில் டதி ஸ்கூல் அருகே போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பிரதமர் மோடியின் உருவப்பொம்மையின் கழுத்தில் காவித் துணியைக் கட்டி தொங்கவிட்டுள்ளனர். போராட்டம் முடிந்து சென்றபிறகும் உருவப்பொம்மை அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸார் உருவப்பொம்மையை அகற்றினர்.

இது குறித்து காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் கூறுகையில், "ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறி தமிழர்களை திருடர்கள் என்ற வகையில் பேசியிருந்தார். அதனால்தான் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம்" என்றார்.

மின் கம்பத்கில் கட்டி தொங்கவிடப்பட்ட ராகுல் காந்தி உருவபொம்மை
மின் கம்பத்கில் கட்டி தொங்கவிடப்பட்ட ராகுல் காந்தி உருவபொம்மை

இதை அடுத்து பா.ஜ.க-வினர் டதி ஸ்கூல் ஜங்சன் பகுதியில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் காலையில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதற்கிடையே காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமாரைக் கைது செய்த கோட்டாறு போலீஸார் அவரை ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் கோட்டாறு காவல் நிலையம் முன்பு திரண்டு இன்று முற்றுகையிட்டனர்.

காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர்
காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர்

இதையடுத்து பா.ஜ.க-வினரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸார் மீது கண் துடைப்புக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் கூறினார்கள்.

சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் கூறினார்கள். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற பா.ஜ.க-வினர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உருவபொம்மையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வடசேரி ஜங்சனில் உள்ள மின்கம்பத்தில் தொங்கவிட்டனர்.

இதை அறிந்து போலீஸார் அங்கு சென்று ராகுல் காந்தி உருவபொம்மையை மீட்டு எடுத்துச் சென்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில் குமரியில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்கள் அனலைக் கிளப்பி உள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு `கவுண்டவுன் ஸ்டார்ட்' - கழற்றிவிடும் மூடில் தி.மு.க!

“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' - மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணை வந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர... மேலும் பார்க்க

ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அமெரி... மேலும் பார்க்க

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட... மேலும் பார்க்க

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்த... மேலும் பார்க்க

"விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன்இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள புகழ... மேலும் பார்க்க