செய்திகள் :

Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான' காமேனியின் மரணம்!

post image

அயதுல்லா அலி கமேனி - ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர்.

இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்... அழுகை... கோபம்.

மற்றொன்று, சிரிப்பு... மகிழ்ச்சி... கொண்டாட்டம்.

கமேனி மரணம் - துக்கம்
கமேனி மரணம் - துக்கம்

முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்...

கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, 'எல்லாமுமானவர்'. அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும்.

தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில... பல... மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம்.

இப்படிப்பட்ட தலைவரின் இறப்பை ஈரானின் ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்...

பிற மத்தியக் கிழக்கு நாடுகள் 'மாற்றம்... முன்னேற்றம்' என்று வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், ஈரான் இன்னும் பழமையைத் தக்க வைப்பதிலேயே இருக்கிறது.

இது அந்த நாட்டு மக்களுக்கு ஒருவித அயர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

அதனால், கமேனியின் மரணம் 36 ஆண்டுக்கால அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்; 'மாற்றம்... முன்னேற்றம்' வரும் என்று நினைக்கிறார்கள்.

கமேனியின் மரணம் ஈரானில் ஆட்சி மாற்றம் முதல் பொருளாதார மாற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள்.

அதன் விளைவுதான், டெஹ்ரான், கராஜ், மஷாட் ஆகிய நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கமேனியின் மரணத்தைக் கொண்டாடியது.

ஈரான் : காமேனி மரணம் - மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அமெரி... மேலும் பார்க்க

படுவைரலான சவால்; கே.சி.வீரமணியால் பின்வாங்கும் தேவராஜி; பிடிகொடுக்காத எ.வ.வேலு- ஜோலார்பேட்டை சடுகுடு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் தி.மு.க மாவட்டச் செயலாளரான க.தேவராஜி, சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட விரும்பாமல், தொகுதி மாறும் திட... மேலும் பார்க்க

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்தார்.இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் மாநகர் மா... மேலும் பார்க்க

DMK : 'பௌர்ணமி தினத்தில் அறிவாலயத்தில் கூடிய அமைச்சர்கள்; போக்குவரத்து நெருக்கடியில் அண்ணா சாலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. பெளர்ணமி தினமான இன்று நல்ல நாள் என்பதால் சிட்டிங் அமைச்சர்கள் பலரும் அறிவாலயத்தை மொய்க்க மவுண்ட் ரோடு முழுவது போக்குவரத்த... மேலும் பார்க்க

"விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன்இணைந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள புகழ... மேலும் பார்க்க

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.ஈரானில் தொடங்கிய போர் அன்றே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவி... அங்கேயும் இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த நில... மேலும் பார்க்க