செய்திகள் :

MQ-4C Triton : ஹோர்முஸ் வளைகுடாவில் அமெரிக்காவின் ரூ.1,600 கோடி மதிப்பிலான உளவு டிரோன் திடீர் மாயம்!

post image

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, சுமார் 200 மில்லியன் டாலர் (ரூ.1600 கோடிக்கு மேல்) மதிப்புள்ள MQ-4C டிரைட்டன் (Triton) என்ற அதிநவீன உளவு டிரோன், அவசரக்கால சமிக்ஞையை அனுப்பிய சில நிமிடங்களில் மர்மமாக மறைந்துள்ளது.

drone
drone

இந்த சம்பவம் வளைகுடா பகுதியில் மீண்டும் ஒரு ராணுவ மோதலுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் வளைகுடா பகுதிகளில் சுமார் மூன்று மணி நேர கண்காணிப்புப் பணியை முடித்துவிட்டு, இத்தாலியில் உள்ள சிகோனெல்லா கடற்படை விமானத் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த டிரோன் மாயமாகியுள்ளது.

ஆன்லைன் விமான கண்காணிப்புத் தளமான 'ஃபிளைட் ராடார் 24' (Flightradar24) வெளியிட்ட தரவுகளின்படி, டிரோன் 'கோட் 7700' என்ற பொது அவசரக்கால சமிக்ஞையை அனுப்பியுள்ளது.

சமிக்ஞை அனுப்பப்படுவதற்கு சற்று முன்பு, டிரோன் ஈரான் வான்பரப்பை நோக்கி இலேசாகத் திரும்பியதாகவும், பின்னர் மிக வேகமாக உயரத்தைக் குறைத்து, ராடார் கண்காணிப்பில் இருந்து மறைந்ததாகவும் அந்தத் தரவுகள் காட்டுகின்றன.

இந்த டிரோன் தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்து நொறுங்கியதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவான தகவலும் இல்லை. அமெரிக்க கடற்படையோ அல்லது பென்டகனோ இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

MQ-4C டிரைட்டன்: அமெரிக்க வான்வழி கண்கள்

அமெரிக்க ராணுவத்தின் மிக விலையுயர்ந்த ஆளில்லா விமானங்களில் ஒன்றான MQ-4C டிரைட்டன், ஒரு சாதாரண டிரோன் அல்ல. இது உயர் Altitude, நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட (High Altitude, Long Endurance - HALE) ஒரு சுயசார்பு விமானமாகும்.

50,000 அடிக்கும் அதிகமான உயரத்தில், தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் ஆற்றல் கொண்டது. இதன்மூலம், சுமார் 7,400 நாட்டிகல் மைல் தொலைவிற்கு கடல் பகுதிகளை இடைவிடாமல் கண்காணிக்க முடியும். P-8A போஸிடான் ரோந்து விமானங்களின் 'வானத்தில் உள்ள கண்களாக' செயல்பட்டு, கடலில் உள்ள கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டங்கள் குறித்த நிகழ்நேர தகவல்களை வழங்குவதே இதன் முக்கியப் பணியாகும்.

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு விழுந்த அடியா?

இந்த டிரோன் காணாமல் போன நேரம், புவிசார் அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. போரைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் வளைகுடாவை வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரான்- அமெரிக்கா
ஈரான்- அமெரிக்கா

இந்த மர்மமான நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையே உருவான மெல்லிய நம்பிக்கையைச் சிதைத்து, மீண்டும் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்க கடற்படையிடம் 20 டிரைட்டன் டிரோன்கள் இருந்ததாகவும், மேலும் ஏழு டிரோன்களை வாங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க

விருதுநகரில் வெற்றி வாகை சூடுவாரா விஜய பிரபாகரன்? - எப்படி இருக்கிறது களம்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்... மேலும் பார்க்க

'திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி ஆரம்பிப்பார்!' - அண்ணாமலை ஆரூடம்

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, ரத்தினபுரி பகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, “20... மேலும் பார்க்க

இறந்த குழந்தைகளும்; எரிந்த Bag-குகளும்: பாகிஸ்தானிற்கு காலிபாஃபுடன் கிளம்பிய 'இறந்த' தோழர்கள்

ஈரான் போர் தொடங்கிய முதல் நாள் - பிப்ரவரி 28, 2026.அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனியை மட்டும் கொன்று உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லை.ஈரானின் மினாப்பில் உள்ள பெண்... மேலும் பார்க்க