செய்திகள் :

Nana Patekar: '13 வயதில் ரூ.35 சம்பளம்' - பெயிண்ட்டராக சினிமா பயணத்தைத் தொடங்கிய நானா படேகரின் கதை

post image

பாலிவுட் நடிகர் நானா படேகர்(75) இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நானா படேகர் தனது இளமைக் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார்.

இதனால் தனது 13 வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்தார். கடந்த 50 ஆண்டுகளில் இந்தி மற்றும் மராத்தி திரைப்படத்துறையில் படிப்படியாக உயர்ந்து ஒரு கட்டத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்தார்.

அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு நாடகத்தில் அதிக அளவில் நடிக்க ஆரம்பித்தார். அங்குதான் அவர் தனது மனைவியையும் சந்தித்தார்.

இளம் வயதில் பணக்கஷ்டத்தில் இருந்தது குறித்து நானா படேகர் ஒரு முறை அளித்திருந்த பேட்டியில், சினிமா போஸ்டர்களை வரைந்ததாகவும், தினசரி சாப்பாடு மற்றும் 35 ரூபாய் ஊதியமாகச் சம்பாதிப்பதாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ''சினிமா சுவரொட்டிகளை ஓவியமாக வரையத் தொடங்கியபோது, ​​எனக்கு 13 வயதுதான். பல கிலோமீட்டர்கள் நடந்து வேலைக்குச் சென்றேன்.

நானா படேகர்
நானா படேகர்

தினமும் ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டேன். அந்த ஆண்டுகள் எனது வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டம். மக்கள் பணம் இல்லாத ஒருவரை ஒரு சுமையாகக் கருதுகிறார்கள்.

மும்பை சுனாபட்டியில் உள்ள தனது பணியிடத்திற்குச் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று என் குடும்பத்திற்கு உதவி செய்தேன்'' என்று குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த நானா படேகர், காமன் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் தீவிரமான, வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களில் நடித்து நற்பெயரைக் கட்டியெழுப்பினார். அங்குஷ் மற்றும் பரிந்தா போன்ற படங்கள் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன.

கிராந்திவீரில் அவரது நடிப்பு அவருக்குச் சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. ரூ.35 மட்டும் சம்பளம் வாங்கிய நானா படேகர் சம்பளம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. 1990களின் நடுப்பகுதியில், நானா படேகர் இந்தி சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரானார்.

அக்னி சாக்ஷி படத்தின் வெற்றிக்குப் பிறகு நானா படேகரின் சம்பளம் ஒரு படத்திற்கு ரூ.1.25 கோடியை எட்டியது. அந்த நேரத்தில், இந்தி திரையுலகில் திரைப்பட ஊதியத்தைப் பொறுத்தவரை அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக நானா படேகர்தான் அதிக சம்பளம் வாங்கினார்.

ரூ.80 கோடி சொத்து

நானா படேகரின் சொத்து மதிப்பு குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பல ஊடகச் செய்திகளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்றும், ஒரு திரைப்படத்திற்கு அவர் 2 முதல் 3 கோடி ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

இந்த அளவுக்கு சம்பளம் வாங்கினாலும் நானா படேகர் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். 2015 ஆம் ஆண்டில், அவர் மராத்தி நடிகர் மகரந்த் அனஸ்புரேவுடன் இணைந்து NAAM அறக்கட்டளையை நிறுவினார்.

இது மகாராஷ்டிராவில் வறட்சி மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டது. பேட்டி ஒன்றில், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ முடிவு செய்தபோது, ​​தன்னிடம் சுமார் 1 முதல் 1.5 கோடி ரூபாய் வரை இருந்ததாகக் குறிப்பிட்டார்.

திரைப்படங்களில் நடித்ததைத் தாண்டி, ராணுவத்துடன் நானா படேகரின் தொடர்பு இருந்தது. 1990-ல் அவர் இந்தியத் தரைப்படையின் 'டெரிட்டோரியல் ஆர்மி'யில் (Territorial Army) இணைந்தார். தனது ராணுவ அனுபவத்தைக் கொண்டு, 'பிரஹார்: தி ஃபைனல் அட்டாக்' (Prahaar: The Final Attack) திரைப்படத்தைத் தயாரித்தார். அப்படத்தில் மேஜர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நானா படேகர் மூன்று ஆண்டுகள் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டதுடன், அப்பயிற்சிக் காலத்தில் ஜெனரல் வி.கே. சிங்குடனும் இணைந்து பணியாற்றினார்.

'மும்பையின் நெருக்கடி எனக்கு பிடிக்காது' - புனே மலையடிவார பண்ணை வீட்டில் நானா படேகரின் இறுதிச்சடங்கு

இன்று காலை கோவாவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமான நடிகர் நானா படேகர் எப்போதும் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என்று நினைப்பவர். பொதுவாக நானா படேகருக்கு சினிமா படப்பிடிப்புகள் மற்றும் வேலை அதிகமாக மும்பையில... மேலும் பார்க்க

Nana Patekar: "நாளை உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பது நிச்சயமில்லை" - வைரலாகும் நானா படேகர் வீடியோ

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 75. கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகர், ... மேலும் பார்க்க

நானா படேகர் : "ரத்தினத்தை இழந்த இந்திய சினிமா" - 90 படங்கள்; 50 ஆண்டுகளில் 3 தேசிய விருதுகள்

இன்று காலை பழம்பெரும் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் 75 வயதில் காலமானார் என்ற சோகமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கோவாவில் உள்ள அவரது வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நானாபடே... மேலும் பார்க்க

"இதயத் துடிப்பைக் கொண்டு வர 45 நிமிடங்கள் போராடினோம்" - நானா படேகரைக் காப்பாற்ற முயன்ற டாக்டர்கள்

பாலிவுட் நடிகர் நானாபடேகர் இன்று அதிகாலையில் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை டாக்டர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது இதயத் துடிப்பை மீண்டும் கொண்டு வர போராடினர... மேலும் பார்க்க

Nana Patekar: 75 வயதில் நடிகர் நானா படேகர் மரணம்; பலனளிக்காத CPR; மருத்துவமனை சொல்லும் காரணம் என்ன?

பாலிவுட் சினிமாவின் மிக முக்கிய நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகர் (75). மராத்தி திரைப்படங்கள்தான் இவரது ஆரம்பப்புள்ளி. தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தென் மாந... மேலும் பார்க்க

"இந்தியாவில் அமைதியை உணரவில்லை" - நடிகர் சஞ்சய் தத்தின் கருத்தால் பாலிவுட்டில் சர்ச்சை

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ''இந்த நாட்டு மக்கள் மிகவும் அழகானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். இனி நம் நாட்டில் அந்த அமைதியை என்னால் உணர முட... மேலும் பார்க்க