செய்திகள் :

Nani: "பாக்ஸ் ஆபீஸ் வசூல், வெள்ளிக்கிழமை ரிசல்ட்டை மனதில்கொண்டு படங்களை ஒப்புக்கொள்வதில்லை!" - நானி

post image

நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் 'தி பாரடைஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது. அவர் சமீபத்தில் வெரைட்டி இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும், புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவது குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நானி
நானி

அவர் பேசுகையில், "நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது பாக்ஸ் ஆபீஸ் வசூல் அல்லது வெள்ளிக்கிழமை ரிசல்ட்டை மனதில்கொண்டு கணக்குப் போட்டுப் படங்களை ஒப்புக்கொள்வதில்லை.

என் மனதிற்கு எந்தக் கதை சரியாகப் படுகிறதோ, அதைத்தான் தேர்வு செய்கிறேன். ஒரு படத்தில் கமிட்டானால் அடுத்த 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அதே படத்தில்தான் நான் பயணிப்பேன். அதனால், முதலில் அந்த ஷூட்டிங் ப்ராசஸை நான் என்ஜாய் பண்ண வேண்டும்.

நான் மகிழ்ச்சியோடு முழு ஈடுபாட்டுடன் வேலை செய்தால், அதற்கான நல்ல பலன் தானாகவே தேடி வரும் என்று ஆழமாக நம்புகிறேன். ஆக்‌ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து போர் அடிக்கும்போது, இயல்பான எளிமையான கதைகளுக்கு மாறிவிடுவேன்.

ஒரு புதுமுக இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வரும்போது, அவருக்கு இயக்கம் பற்றிய அனுபவம் இருக்கிறதா என்பதைவிட, சினிமா மீது அவருக்கு எந்தளவிற்குப் பேராசையும் காதலும் இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்ப்பேன். அந்தப் பேரார்வம் இருந்தால் அனுபவமின்மையை எளிதாகக் கடந்துவிட முடியும்.

Nani
Nani

எனக்குச் சிறுவயதிலிருந்தே 'கிளாடியேட்டர்' போன்ற ஒரு வரலாற்று ஆக்‌ஷன் காவியத்தில் நடிக்க வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது. அதேபோல 'தி பர்சூட் ஆஃப் ஹாப்பினஸ்' படமும் என்னை மிகவும் பாதித்த ஒன்று.

ஆனால், 'ஜெர்சி' போன்ற ஒரு காலத்தால் அழியாத படம் எனக்கு அமைந்துவிட்டதால், அந்த ஆசை நிறைவேறிய திருப்தி எனக்கு இருக்கிறது. இப்போது முழுநேர இயக்குநராகும் எண்ணம் எதுவும் இல்லை. ஒரு நடிகனாக இந்த நிலையை நான் மிகவும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

'ராஷ்மிகா 100 முறை கேட்ட பிறகே சம்மதித்தேன்.!'- விஜய் தேவரகொண்டாவின் பேச்சு; கொந்தளித்த நெட்டிசன்கள்

தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களது நடிப்... மேலும் பார்க்க

"இந்திய புராண கதைகளை திரையில் காட்சிப்படுத்திய விதம் எனக்கு திருப்தி அளித்ததே இல்லை!" - ராஜமெளலி

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, 'வாரணாசி' பட வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். Mahesh Ba... மேலும் பார்க்க

"திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன்!" - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இதுதான். விஜய் தேவ... மேலும் பார்க்க

Ranabali: "என்னை பார்த்து ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் பரவாயில்லை!" - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம், இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பல்வேறு... மேலும் பார்க்க

'கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள்... விஜய் தேவரகொண்டா கோபப்பட்டு கத்திவிட்டார்; நான்.!" - ராஷ்மிகா

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் 'ரணபலி'. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க

ரணபலி: ``நான் விஜய் தேவரகொண்டாவுக்கு நேரெதிரானவள்" - நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து ரணபலி திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் தோழன்’ ஆகிய வெற்றிகரமான படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ந... மேலும் பார்க்க