செய்திகள் :

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

post image

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார்.

கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது.

நெப்போலியன்
நெப்போலியன்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன்.

இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம்.

அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், "உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர்.

அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன்.

எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார்.

இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்திருக்கிறார்.

29: "தனுஷ் சாருக்குத்தான் இந்தக் கதையைச் சொல்லியிருந்தோம், ஆனா அவரு.!"- கார்த்திக் சுப்புராஜ்

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார். விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்க... மேலும் பார்க்க

"களத்துல லிங்கம்தான் பெரிய ஆளு"- Jio Hotstar நிகழ்ச்சியில் வெளியான விகடனின் 'லிங்கம்' புரொமோ

சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் நடத்திய 'South Unbound' நிகழ்ச்சி நேற்று (டிச.10) நடைபெற்றது. பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக நான்கு மாநிலங்களில் 12,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாக ஜியோ ஹாட்ஸ்... மேலும் பார்க்க