செய்திகள் :

Naresh Iyer: 'காதல்தான் கள் எழுத்து அன்பே!' - பாடகர் நரேஷ் ஐயருக்கு திருமணம்; வாழ்த்தும் ரசிகர்கள்!

post image

'முன்பே வா', 'மயிலிறகே' உள்ளிட்ட பல ஹிட் பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயர்.

தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களுக்குப் பிடித்தமான பாடல்களைத் தந்து பலரின் ஃபேவரிட்டாக இருக்கிறார்.

நரேஷ் ஐயர்
நரேஷ் ஐயர்

இவருக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள ஸ்ரீ ஐயப்ப விஷ்ணு கோயிலில் இவரின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

அவருடைய திருமணம் தொடர்பாக நரேஷ் ஐயர் சமூக வலைத்தளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இவர்களுக்குத் திருமணம் நடைபெற்ற ஸ்ரீ ஐயப்ப விஷ்ணு கோயில் நிர்வாகம், அவர்களுடைய சமூக வலைத்தளக் கணக்கில் இத்தகவலைப் பகிர்ந்திருக்கிறது.

அந்தப் பதிவில், "தேசிய விருது பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயரின் திருமணத்திற்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இப்பெருமகிழ்ச்சிக்குரிய புதிய வாழ்க்கைப் பயணம் எங்களது திருக்கோயிலில் தொடங்குவதை நாங்கள் பெரும் பேறாகக் கருதுகிறோம்.

புதிதாக திருமணப் பந்தத்தில் இணைந்துள்ள தம்பதியருக்கு இறைவனின் அருளால் வாழ்நாள் முழுவதும் அன்பும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், வளமும் பெருக வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம்.

இவர்கள் இருவரும் ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்கள்.

நரேஷ் ஐயரின் ரசிகர்கள் பலரும் அவருடைய திருமணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மைனா : பயணம் என்ன செய்யுமோ, மைனா அதை செய்தது.! `ஒன்றின்றி ஒன்றில்லை' | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 24

`சினி'ஸ்கோப் 24மைனா: ஒன்றின்றி ஒன்றில்லை!மைனாவின் அம்மா குருவம்மா சுருளியிடம், ‘உன்னை மாதிரி வெறும்பயலுக்கா என் புள்ளையைக் கொடுப்பேன்?’ என்று கொதிக்கிறாள். அவளுக்குத்தான் என்னவொரு சுயநலம்? ஒரு குட்டிப... மேலும் பார்க்க

Mandaadi: "அந்த வகையில் நான் பார்த்த முதல் பிளாக்பஸ்டர் படம் இதான்"- 'மண்டாடி' குறித்து வெற்றி மாறன்

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறா... மேலும் பார்க்க

Vikram: 'ஃபுல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன்!' - 2027 ரிலீஸ் - 'சீயான் 63' டைட்டில் அறிவிப்பு!

'இருமுகன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் சங்கருடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார் நடிகர் விக்ரம். 'வீர தீர சூரன்' ரிலீஸுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அவருடைய 63-ஆவது படத்தின் அறிவிப்பு சில ... மேலும் பார்க்க

"என்னுடைய கதைகளிலேயே 'டோரதி'தான் நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது" - கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி' திரைப்படம் இம்மாதம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி - Dhruv Vikram Updates

துருவ் விக்ரமிற்கு 'பைசன்' திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை டோலிவுட... மேலும் பார்க்க

"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" - மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை

நடிகர் முத்துக்காளை தனது மகன் வாசன் முரளியை ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்த்துள்ளார். சினிமாவில் நடிகராவதற்கு முன்னர் ஒரு ஃபைட்டாராக தனது கரியரைத் துவக்கியவர் முத்துக்காளை. பின்னர் காமெடி நடிகரா... மேலும் பார்க்க