Maruti Suzuki, Zomato ரிசல்டுகள் அவுட்: ஒன்று 'நெகட்டிவ்'; மற்றொன்று 'பாசிட்டிவ்...
NRI Corner 12 : இந்தியா திரும்பும் முன் மாதம் ₹100000 'பாஸிவ் இன்கம்' உருவாக்குவது எப்படி?
வெளிநாடுகளில், குடும்பத்தைப் பிரிந்து, பல வருடங்களாக உழைக்கும் 40+ வயதுள்ள ஒவ்வொரு NRI-க்கும் ஒரு ஆழமான கனவு உண்டு. "இன்னும் சில வருஷத்துல ஊருக்குப் போயிடணும். எந்த ஆபீஸ் டென்ஷனும் இல்லாம, நம்ம ஊர்ல, நம்ம வீட்ல நிம்மதியா வாழணும். ஆனா, வேலைக்குப் போகலைனா மாசச் செலவுக்கு என்ன பண்றது?" என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.
ஒரு நிதி நிபுணராக, உங்களின் இந்த நியாயமான கனவையும், அதனுள் இருக்கும் ஆழமான பயத்தையும் நான் அறிவேன்.
பெரும்பாலான NRI-கள், பல ஆண்டுகள் கடினமாக உழைத்து ஒரு பெரிய தொகையைச் சேர்த்திருப்பார்கள். ஆனால், அந்தப் பணத்தை வெறும் NRE/NRO ஃபிக்சட் டெபாசிட்டுகளில் (FD) போட்டுவிட்டு, மாதம் ஒரு தொகையை வட்டியாகப் பெறலாம் என்று நம்புவார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு! இன்று FD வட்டி விகிதம் வெறும் 6.5% முதல் 7% ஆக மட்டுமே உள்ளது.
இதை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கும். நீங்கள் மாதம் ₹1 லட்சம் வருமானம் வேண்டும் என்று நினைத்து, ₹1.7 கோடியை FD-யில் வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 7% வட்டியில் இன்று உங்களுக்கு மாதம் ₹1 லட்சம் கிடைக்கலாம். ஆனால், இந்தியாவில் பணவீக்கம் (Inflation) 7% வேகத்தில் வளர்கிறது.
அடுத்த 10 வருடத்தில், உங்கள் மாதாந்திரச் செலவு ₹2 லட்சமாக மாறியிருக்கும். ஆனால் உங்கள் FD அதே ₹1 லட்சத்தைத்தான் கொடுக்கும். நாளுக்கு நாள் மருத்துவச் செலவுகளும் (14% Medical Inflation) கூடிக்கொண்டே போகும். உங்கள் அசலையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செலவு செய்யும் நிலை வந்தால், 15-20 வருடங்களில் உங்கள் மொத்த சேமிப்பும் காலியாகிவிடும்.
"ஊருக்கு வந்து நிம்மதியா வாழலாம்னு நெனச்சோமே, கடைசியில கையில் காசில்லாம போச்சே!" என்ற வேதனை வரக் கூடாது அல்லவா?
இதற்கு ஒரே தீர்வும், தப்பிக்கும் வழியும் – மியூச்சுவல் ஃபண்டுகளில் 'Systematic Withdrawal Plan' (SWP) முறைதான். உங்கள் பணத்தை பணவீக்கத்தை வெல்லும் ஈக்விட்டி (Equity) மற்றும் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து, அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்குத் தேவையான ₹1 லட்சத்தை மட்டும் 'பாஸிவ் இன்கம்' (Passive Income) ஆக எடுத்துக்கொள்வது.

இதன் மேஜிக்கை நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்:
உங்களிடம் ₹1.5 கோடி முதலீடு உள்ளது என வைத்துக்கொள்வோம். இதை வரலாற்று ரீதியாக 12% சராசரி வருமானம் தரும் ஒரு நல்ல பேலன்ஸ்டு அல்லது ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள். இதிலிருந்து 8% விதியை (Withdrawal rate) பயன்படுத்தி, மாதம் ₹1 லட்சம் (வருடத்துக்கு ₹12 லட்சம்) எடுக்கிறீர்கள்.
15 வருடங்கள் கழித்து, நீங்கள் மொத்தம் ₹1.8 கோடியை மாதாந்திர வருமானமாக எடுத்திருப்பீர்கள். ஆனால், உங்கள் மீதமுள்ள அசல் கரையாமல், காம்பவுண்டிங் (Compounding) சக்தியால் வளர்ந்து சுமார் ₹2.8 கோடியாக உயர்ந்து நிற்கும்! (இதுதான் SWP-ன் உண்மையான சக்தி). மேலும், FD வட்டியைப் போல 30% வரி கட்டத் தேவையில்லை. ஈக்விட்டி SWP-ல் லாபத்துக்கு மட்டும் 12.5% நீண்ட கால மூலதன ஆதாய வரி (LTCG) மட்டுமே!
உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கத் தொடங்கும் இந்த ஸ்மார்ட்டான முடிவால், உங்களின் அசல் ஒருபோதும் கரையாது. நீங்கள் இந்தியா திரும்பும்போது, யாருடைய உதவியும் இல்லாமல், எந்தப் பண நெருக்கடியும் இல்லாமல், நீங்கள் ஆசைப்பட்ட அந்த சுதந்திரமான, கௌரவமான இரண்டாவது வாழ்க்கையை கம்பீரமாக வாழலாம்.

உங்கள் குடும்பத்தின் வாழ்நாள் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒர்க் ஷாப்!
தலைப்பு : ₹1 லட்சம் இரண்டாவது வருமானம் பெறும் வழி - NRI சிறப்பு வழிகாட்டல்
நடைபெறும் நாள் : மே 2, 2026, 12:30 PM இந்திய நேரம்
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோக நிறுவனமான லாபம் வழங்கும் இந்தப் பிரத்யேக ஆன்லைன் பயிலரங்கில், NRI-களுக்கான சரியான SWP உத்திகள், வரிச் சலுகைகள் மற்றும் மூலதனத்தைக் கரையாமல் பாதுகாக்கும் ரகசியங்களை நேரடியாகக் கற்றுக்கொள்ளலாம். உங்களின் நிம்மதியான எதிர்காலத்தை இன்றே உறுதி செய்ய பெயரை முன்பதிவு செய்யுங்கள். குறைந்த இடங்கள் மட்டுமே, முன்பதிவு கட்டாயம்: https://labham.money/events/webinar-may02-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may02_2026
NRI Corner சீரிஸ்-ஐ தொடர்ந்து படிப்பவர் நீங்களா?
நிகழ்ச்சிக்கு முன்னதாகவே, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் சரியான வழிகாட்டலோடு, ரிஸ்க்கைக் குறைத்து வளர்ச்சியைப் பெற நினைக்கிறீர்களா? ஆம் என்பவர்கள் மட்டும் இந்த லிங்கைக் களிக் செய்து லாபம் டீமிடம் இப்போதே பேசலாம் - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

















