செய்திகள் :

NZ vs IND: "சிராஜை நீக்குவது கடினமான முடிவுதான்; ஆனால்..." - விமர்சனங்களுக்கு கில்லின் பதில் என்ன?

post image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.

ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் அறிமுக வீரர் அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அனுபவ வீரரான சிராஜ் ஓரங்கட்டப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

முகமது சிராஜ்
முகமது சிராஜ்

வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், சிராஜ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பேசியிருக்கிறார்.

"சிராஜ் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரை அணியிலிருந்து நீக்குவது என்பது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஆரம்பக்காலம் முதலே எனக்கு அவரை நன்றாகத் தெரியும்.

சுப்மன் கில் பதில்
சுப்மன் கில் பதில்

டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே அவரிடம் நேரில் பேசி, இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கினேன். அவரும் அதைப் புரிந்துகொண்டார். தற்போதைய ஃபார்மை அடிப்படையாகக் கொண்டே அணியைத் தேர்வு செய்தோம். சிராஜ் எப்படிப்பட்ட வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். நிச்சயம் இதிலிருந்து அவர் மிகச் சிறப்பாக மீண்டு வருவார்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

15 ஓவர்கள் மீதமிருக்கும்போதே டிரா செய்தது ஏன்? சிராஜ் தேர்வாகாதது ஏன்? - பதில் சொல்லும் கேப்டன் கில்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 720 ரன்களைக் குவித்தும் வெற்றியைப் பெற முடியாமல் டிராவில் முடித்தது இந்தியா. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 15 ஓவர்கள் மீதமிருந்தபோதே இரு அணி கேப்டன்களும் கைகு... மேலும் பார்க்க

"வரலாற்றை புரட்டிப் பாருங்கள்"- சிராஜ் விவகாரத்தில் எழுந்த பாகுபாடு குற்றச்சாட்டு குறித்து மதன் லால்

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படாத விவகாரத்தில், மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறி இருந்தார்.அந்தக் குற... மேலும் பார்க்க

`சார், என் மனைவி அழுதுகொண்டிருக்கிறார் என கம்பீரிடம் சொன்னேன்.!' - வதந்திகளால் உடைந்த சர்ஃபராஸ் கான்

இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை கசியவிட்டதாக தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால் தானும் தனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த இக்கட்டான சூழலில் தலைமைப் பயிற்சியாள... மேலும் பார்க்க

மதுரை: 'தல தோனி' முழக்கம்.... தோனியின் புகைப்படங்கள், கிரிக்கெட் உபகரணங்களுக்குச் சிறப்புப் பூஜை!

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இருப்... மேலும் பார்க்க

தோனி புகைப்படம், கிரிக்கெட் பேட்டுக்கு சிறப்புப் பூஜை – மதுரையில் தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சி | Photos

தோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைIPL 2027: தோனி ஓய்வு; ஸ்டார்க் - போல்ட் விடுவிப... மேலும் பார்க்க

IPL 2027: தோனி ஓய்வு; ஸ்டார்க் - போல்ட் விடுவிப்பு - வரும் ஐபிஎல் மினி ஏலம் எப்படி இருக்கும்?

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக அனைத்து 10 அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை அணிகள் எடுத்திருக்கும் அதிரடி... மேலும் பார்க்க