செய்திகள் :

Oscars: "ஆஸ்கர் தேர்வில் அரசியல் இருக்கிறது!" - அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்

post image

ஆஸ்கர் விருதின் 'சிறந்த சர்வதேசத் திரைப்படம்' பிரிவுக்காக இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக மராத்தி படமான 'கோந்தல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பரிந்துரை குறித்துப் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்த விமர்சனம் தற்போது மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

இந்தப் படம் குறித்து அனுராக் காஷ்யப், "ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா தொடர்ந்து முற்றிலும் தவறான படங்களையே தேர்வு செய்து வருகிறது. தகுதியான சிறந்த படங்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தும், அதை நாமே கெடுத்துக் கொண்டோம்.

இந்தத் தேர்வுக் குழுவின் முடிவுகளில் அளவுக்கு அதிகமான அரசியலும் விழிப்புணர்வின்மையும் இருக்கின்றன. தற்போது தேர்வாகியுள்ள 'கோந்தல்' படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் அதைப் பற்றி இப்போதே எதுவும் கருத்துச் சொல்ல முடியாது.

ஆனால், ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விளம்பரங்களுக்காகப் பணத்தை வீணடிப்பது தேவையில்லாதது" எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து 'கோந்தல்' இயக்குநர் சந்தோஷ், "இயக்குநர் அனுராக் காஷ்யப் சார் மீதும் அவரது படைப்புகள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

கடந்த ஏப்ரல் மாதம் மும்பை விமானப் பயணத்தின் போது, 'கோந்தல்' படம் பற்றி அவரிடம் நேரில் எடுத்துரைத்தேன்.

அப்போதே அவர் இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்றும், கண்டிப்பாய்ப் பார்ப்பதாகவும் கூறினார். படம் எடுப்பதே பார்க்கத்தான்!

Gondhal Movie
Gondhal Movie

தயவுசெய்து எந்தவொரு முடிவிற்கும் வரும் முன், முதலில் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சியுங்கள். சினிமா பின்னணி எதுவுமில்லாத ஒரு அறிமுக இயக்குநராக, மராத்தி கலாச்சாரத்தை வைத்து இந்த த்ரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

இது திரையரங்குகளுக்காக உருவாக்கப்பட்ட படம். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு நன்றாகவே தெரியும், கண்டிப்பாய் நாட்டின் பெருமையைக் காப்பாற்றுவோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சொத்தில் ரூ.2490 கோடி இழப்பு; ஆனாலும் 'பணக்கார நடிகர்' அந்தஸ்தை ஷாருக்கான் தக்கவைத்து எப்படி?

இந்திய நடிகர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வெளியாகி இருக்கிறது. ஹுருன் இந்தியா நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்திய அளவில் மிகப்பெரிய பணக்கார நடிகராக அறிவிக்கப... மேலும் பார்க்க

Radhika Apte: "அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை!" - ராதிகா அப்தே

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது 'லஸ்ட் ஸ்டோரீஸ் 3' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தே | Radhika Apteதனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத... மேலும் பார்க்க

'பெருமையால் அழுகிறேன்..!'- புற்றுநோயை வென்று கதாநாயகியான வளர்ப்பு மகள்; நெகிழ்ந்த விவேக் ஓபராய்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயால் சிறுவயதில் தத்தெடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஹாரா ஷா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது முதல் நேபாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்... மேலும் பார்க்க

பெண் மேலாளரின் துப்பட்டாவில் முகத்தைத் துடைத்த ஷாருக்கான்; என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

மும்பையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மும்பையில் உள்ள விநாயகர்களில் லால்பாக் ராஜா மிகவும் பிரபலம் ஆகும். இந்த விநாயகரைத் தரிசிக்க பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதி... மேலும் பார்க்க

'துவா'வுக்கு சகோதரி கிடைத்துவிட்டாள்: தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல்... மேலும் பார்க்க

சுஷாந்த் சிங் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கு: "அவரை எனக்கு தெரியாது" - ஆதித்ய தாக்கரே திட்டவட்டம்

மும்பையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவரிடம் மேலாளராக இருந்த திஷா சாலியன் அதே ஆண்டு ஜூன் 8ம்... மேலும் பார்க்க