செய்திகள் :

Parasakthi: 'ரிலீஸ் தேதி மாற்றம்!'; ஜனநாயகனுக்கு அடுத்த நாள் வெளியாகும் 'பராசக்தி' - வெளியான அப்டேட்

post image

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது.

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

பராசக்தி படத்தில்...
பராசக்தி படத்தில்...

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் இது. இதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயனின் 25-வது படம், ரவி மோகன் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் படம் என முக்கிய மைல்ஸ்டோன்களும் இப்படத்திற்கு இருக்கின்றன.

பொங்கல் பண்டிகை வெளியீடாக இத்திரைப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகவிருக்கிறது என பேசப்பட்டு வந்தது.

தற்போது தயாரிப்பு நிறுவனமும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறது.

திட்டமிடப்பட்டிருந்த தேதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 10-ம் தேதியே 'பராசக்தி' படம் திரைக்கு வருகிறது.

பராசக்தி படத்தில்...
பராசக்தி படத்தில்...

விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

'பராசக்தி' வெளியாவதாக திட்டமிட்டிருந்த தேதியில் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் வெளியாவதால், படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே செய்திருப்பதாக பேசப்படுகிறது.

ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறித்து தயாரிப்பு நிறுவனம், "'பராசக்தி' திரைப்படத்தின் வெளியீடு ஜனவரி 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த முடிவு, உலகெங்கிலுமுள்ள விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும் எடுக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Sirai: "விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்!" - எஸ்.ஏ. சந்திரசேகர்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... மேலும் பார்க்க

Sirai: "மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது!" - ஆர். கே. செல்வமணி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... மேலும் பார்க்க

Sirai: "கதையை எப்படி பிடிக்கணும்னு வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்!" - இயக்குநர் தமிழ்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ப... மேலும் பார்க்க

Sreenivasan: "அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது!" - பார்த்திபன் உருக்கம்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவர... மேலும் பார்க்க

``மனுசனோட எல்லா அழுக்கையும் பேசுறது தான் இந்தக் கதை" - பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி

இளம் இயக்குநர் அபிலாஷ் இயக்கத்தில், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் வெளியீட்டில் 'பேச்சி' என்ற குறும்படம் யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யா "மனதை நெகிழ வைக... மேலும் பார்க்க