செய்திகள் :

PM SHRI: ``முதலமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை!

post image

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கையை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி நிதியை நிறுத்தி வைத்தது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி அமைந்ததும், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ``இனிவரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கையும், வருகையும் அதிகரிக்கும். இருமொழி கொள்கை என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. அதில் மாற்று கருத்தே கிடையாது. கொள்கை சமரசம் என்று பேச்சுக்கே இங்கு இடமில்லை" என்றிருக்கிறார். அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்" என்று பேசியிருந்தார்.

ராஜ் மோகன் - தவெக
ராஜ் மோகன் - தவெக

அமைச்சர் ராஜ்மோகன் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய முதல்வர் விஜய் அவர்கள் முதலில் தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் எது சிறந்தது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருக்கட்டும், பி.எம். ஸ்ரீ திட்டமாக இருக்கட்டும், லட்சக்கணக்கான கல்வியாளர்கள் கருத்துகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கல்வி முன்னேற்றத் திட்டங்களே. இவை நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மாநிலங்களில் எல்லாம் கல்வி சிறப்பாக உள்ளது. சென்ற ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்காததற்கு காரணம், இதுபோன்ற நல்ல திட்டங்களை அரசியல் ரீதியாக எதிர்த்ததுதான். இங்கே தமிழ்நாடு கல்வி அமைச்சர் சிங்கப்பூரைப் பற்றி சொல்கிறார். சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாகவே அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

ஆக, அரசியல் கொள்கை முடிவில் எந்த சமரசமும் இல்லை என்று சொல்கிறார். ஆனால் இந்த கல்வித் திட்டங்கள் எல்லாம் அரசியல் கொள்கை அல்ல; அவசியமான கல்விக் கொள்கைகள். ஆகையால், இதுபோல் புதிய அமைச்சர்கள் எந்தக் கொள்கையையும் தீவிரமாக விசாரிக்காமல், ஆழமாக கலந்தாலோசிக்காமல் கருத்து சொல்வது மேம்போக்காக துறையை எடுத்துச் செல்வதற்கே வழிவகுக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உ.பி: 9 ஆண்டுகளில் 17,043 என்கவுன்ட்டர்கள்: யோகி அரசின் `Zero-Tolerance' நடவடிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது முதல், குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக 'Zero-Tolerance' (பூஜ்ஜிய சகிப்புத்தன்மை) கொள்கையை தீவிரமாக நடைமுறை... மேலும் பார்க்க

தவெக: ``என்னை மட்டும் போகஸ் செய்து விமர்சிக்கிறார்கள்!" - எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்க வீடியோ

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளைச் சந்தித்து, தொகுதி... மேலும் பார்க்க

'மூன்றே மாதம் மில்லியன் டாலர் கணக்கில்' தன்னுடைய முதலீட்டிற்கு 'அதிபர்' பதவியை பயன்படுத்திய ட்ரம்ப்?

'மூன்று மாதங்களில் 3,700 மேலான டிரேட்கள்' - அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதலீட்டு தகவல்கள் வெளியாகி உள்ளன. 2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ட்ரம்ப் 3,700-க்கும் அதிகமான டிரேட்களை செய்துள்ளார். இ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி மீதான வழக்கு: "அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும்" - அன்புமணி கோரிக்கை

வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்... மேலும் பார்க்க

அதிமுக: ``எடப்பாடி அச்சப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள்!" - சொல்கிறார் சி.வி.சண்முகம்

அ.தி.மு.கவின் தொடர் தேர்தல் தோல்விகள் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவ முறை குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே கருத்துவேறுபாடு நிலவுகிறது. தவெக ஆதரவுப்போக்... மேலும் பார்க்க

TVK: ’அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினாரா?’ - சர்ச்சையில் MLA கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில் கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ”கவுண்டம்பாளையம் ... மேலும் பார்க்க