செய்திகள் :

"Project Freedom-ஐ நிறுத்தி வைக்கிறோம்" - மாறி மாறி பேசும் ட்ரம்ப்; ஈரானும், அமெரிக்கா இடையே பேச்சு?

post image

இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் (மே 4), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்கா உதவி செய்யும்' என்று Project Freedom-ஐ அறிவித்திருந்தார்.

ஆனால், முழுமையாக மூன்று நாள்கள் முடிவதற்குள் தன்னுடைய பேச்சை மாற்றி பேசியிருக்கிறார் ட்ரம்ப்.

இன்று (இந்திய நேரப்படி) தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில்...

"பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கையை ஏற்றும், ஈரான் நாட்டுக்கு எதிரான போரில் நாம் பெற்றுள்ள மிகப்பெரிய ராணுவ வெற்றிகளைக் கருத்தில் கொண்டும், ஒரு முடிவை எடுத்துள்ளோம்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

மேலும், ஈரான் நாட்டுப் பிரதிநிதிகளுடன் ஒரு முழுமையான மற்றும் இறுதிக்கட்ட ஒப்பந்தத்தை எட்டுவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

அதன்படி, ஈரான் மீதான கடல் வழி முற்றுகை முழு அமலில் இருக்கும் அதே வேளையில், 'புராஜெக்ட் ஃப்ரீடம்' அதாவது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை வெளியேற்றும் பணி - தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இந்த இடைவெளியில், அந்த இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்வதும், பின்னர், ஈரானுக்கு மிரட்டல் விடுப்பதும் ட்ரம்பின் 'புது' வழக்கமாக மாறியிருக்கிறது. இதில் எது உண்மை... எது இல்லை என்பது ட்ரம்பிற்கே வெளிச்சம்.

ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திமுக - அதிமுக கூட்டணி? | Live

'திமுக எதிர்க்கட்சிதான்!'திமுக - அதிமுக கூட்டணி என பரவி வரும் நிலையில் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி 'திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும்' என ட்வீட் செய்திருக்கிறார்.திமுக முன்னாள் எம்.பியின் ட்வீட்!தி... மேலும் பார்க்க

'விலக்கப்பட்ட விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு?; கூட்டு சேரும் திமுக - அதிமுக?' - நிலவரம் என்ன?

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு... மேலும் பார்க்க

விஜய்க்கு எதிராக திமுக - அதிமுக கூட்டு? திரை மறைவில் நகர்த்தப்படும் காய்கள்! - பின்னணி என்ன?

ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவு... மேலும் பார்க்க

PM SHRI திட்டம்: `புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசின் முடிவென்ன?' - கடிதம் எழுதிய மத்திய அரசு!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ (PM SHRI) திட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) ஒரு பகுதி... மேலும் பார்க்க

காங்கிரஸ்: 'பச்சைத் துரோகம்; சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி' - டி.ஆர்.பாலு காட்டம்!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்திருக்கிறது. இந்த விவகாரம் திமுக தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிட்டு, கூட்டணி பலத்தில் 5 தொ... மேலும் பார்க்க