செய்திகள் :

QR Code: ஸ்கேன் செய்யும் கறுப்பு வெள்ளைப் படத்தின் ரகசியம் என்ன? - இது தெரியாமப் போச்சே?! - 13

post image

நாம் தினமும் QR Code ஸ்கேன் செய்கிறோம். கறுப்பு , வெள்ளை கலந்த அந்தப் படம் எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா?

ஸ்கேனர் எப்போதும் கறுப்பு வரிகளைப் படிக்காது, அவற்றுக்கு இடையே உள்ள வெள்ளை இடைவெளியைத்தான் படிக்கிறது. Barcode, QR Code கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களுக்கு இடையிலான வேறுபாட்டை (Contrast) அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. வெள்ளை நிறம் ஒளியைப் பிரதிபலிக்கும், கருப்பு நிறம் ஒளியை ஈர்க்கும் என்ற அறிவியல்தான் இங்கும் பயன்படுகின்றது.

qr code
qr code

எனவே, ஸ்கேனர் வெளியிடும் ஒளியானது கறுப்பு வரிகளில் பட்டு ஈர்க்கப்படுகிறது, ஆனால் வெள்ளை இடைவெளிகளில் பட்டு மீண்டும் ஸ்கேனரில் உள்ள சென்சாருக்குத் திரும்புகிறது. இந்த ஒளித் திருப்பம் (Reflected light) தான் 0 மற்றும் 1 என்ற பைனரி எண்களாக மாற்றப்பட்டு புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே, ஸ்கேனர் அந்த வெள்ளை இடைவெளிகள் உருவாக்கும் ஒளி அமைப்பைத்தான் (Pattern) வாசிக்கிறது.

இதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது. 1948-ம் ஆண்டு நார்மன் ஜோசப் உட்லேண்ட் (Norman Joseph Woodland) என்பவர், தனது நண்பர் பெர்னார்ட் சில்வருடன் இணைந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை எளிதாக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்க நினைத்தார்.

ஒருநாள் மியாமி கடற்கரையில் அமர்ந்திருந்த உட்லேண்ட், சிறு வயதில் தான் கற்ற Morse code (தகவல்களைப் பரிமாறும் புள்ளிகள் மற்றும் கோடுகள்) பற்றி யோசித்தார். அப்போது தனது நான்கு விரல்களை மணலில் இழுத்தபோது ஏற்பட்ட வரிகளைப் பார்த்து அவருக்கு உதித்த யோசனைதான் இந்த பார் கோட்! 1952-ல் இதற்கு அவர்கள் காப்புரிமை பெற்றனர்.

உலகிலேயே முதன்முதலாக 1974-ஆம் ஆண்டு ஓகியோவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், Wrigley's chewing gum பாக்கெட்டில்தான் பார் கோட் அதிகாரபூர்வமாக ஸ்கேன் செய்யப்பட்டது.

qr code
qr code

பார் கோடின் அடுத்தகட்ட தொழில்நுட்பப் பரிணாமமே நாம் இன்று சாதாரணமாகப் பயன்படுத்தும் QR Code.

'உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை' - இந்த மெசேஜ் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்க!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து 'இறுதி வாக்காளர் பட்டியலும்' வெளியாகிவிட்டது. இன்னும் 20 நாள்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலே நடைபெற உள்ளது. இந்த நேரத்தில், பலருக்கு 'தற்போது வெளியா... மேலும் பார்க்க

Honda: ஆற்று மணலுக்கு முற்றுப்புள்ளி; பாலைவன மணலில் புரட்சி செய்யும் ஹோண்டா!

வெறும் கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் தயாரிப்பதோடு நின்றுவிடாமல், உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணக் களம் இறங்கியுள்ளது ஹோண்டா (Honda). அதன் ஒரு பகுதியாக, ஒரு புதிய ஸ்டார்ட்-அப... மேலும் பார்க்க

நாளை வெளியாகும் 'Redmi Note 15 5G Special Edition' - பேட்டரி கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எப்போதுமே ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் ஷாவ்மியின் ரெட்மி நோட் சீரிஸ், மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்துடன் களமிறங்கியிருக்கிறது. ஆம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ர... மேலும் பார்க்க

எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta & Youtube; '6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு' - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

"6 வயதில் யூடியூப்பிற்கு அடிமை... 9 வயதில் இன்ஸ்டாகிராமிற்கு அடிமை. 10 வயதில், மன அழுத்தம் வந்துவிட்டது. இதனால், என்னை நானே தாக்கிக் கொள்வேன். 13 வயதில் எனக்கு Social Phobia (சமூக பயம்), Body Dysmorph... மேலும் பார்க்க

Smart Phone-ல் அந்தச் சிறு துளை எதற்கு? | இது தெரியாமப் போச்சே?! 1

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் கீழ்ப்பகுதியில் ஊசி முனை அளவிலான ஒரு சிறிய துளை இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். சிலர் இதை மைக் என்றோ, Reset பட்டன் என்றோ நினைத்திருக்கக் கூடும். ஆனால், அதன் உண்மைய... மேலும் பார்க்க

AC: ஏசி-யின் நட்சத்திரக் குறியீடுகள் என்ன சொல்கின்றன? - 5 Star - 3 Star AC வித்தியாச கணக்கு என்ன?

ஏசி நட்சத்திர குறியீடு, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஒவ்வொரு நட்சத்திர குறியீடுகளும் எதனை கடத்துகிறது.? இது குறித்து தமிழகத்தின் முன்னணி மின்சாதன விற்பனை நிறுவனத்தின் பிராண்டிங் துறையில் ஒரு... மேலும் பார்க்க