செய்திகள் :

Rage Bait: 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை; `இது வெறும் சொல் அல்ல' - எச்சரிக்கும் ஆக்ஸ்போர்ட்!

post image

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்போர்ட் அகராதி ஒரு சொல்லைத் தேர்வு செய்து அதை அந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக அறிவிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு "ரேஜ் பெய்ட்" (Rage Bait) என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருக்கிறது.

ஆன்லைனில் எதையாவது படிக்கும்போது அல்லது பார்க்கும்போது, அது வேண்டுமென்றே நம்மைக் கோபப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுபோல் தோன்றியிருக்கிறதா?

Rage Bait
Rage Bait

உதாரணமாக ஒரு உறவினரை, அல்லது செல்லப்பிராணியை, நண்பரை எரிச்சலூட்டுவதுபோன்ற காணொளியைப் பார்த்துக் கோபப்பட்டிருக்கிறீர்களா? அதைத்தான் "ரேஜ் பெய்ட்" (Rage Bait) என்கிறார்கள். வேண்டுமென்றே மக்களைக் கோபப்படுத்தி, அதன் மூலம் அதிக லைக், கமெண்ட், ஷேர் வாங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட கண்டென்ட்.

சமூக வலைதள அல்காரிதம்கள் கோபத்தை உருவாக்கும் கண்டென்ட்களை அதிகம் காட்டுகின்றன. அதனால், மக்கள் கோபத்தைத் தூண்டும் பதிவுகளை அதிகம் பார்த்து, தங்கள் கருத்துகளைப் பதிவிடுகிறார்கள். இந்தச் செயல்முறைகளால், இந்த ஆண்டு "Rage Bait" என்ற வார்த்தையின் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

சில இடங்களில் அரசியல் விவாதங்களில் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய்த் தகவல்கள், மக்களிடம் பிரிவினையைத் தூண்டும் கருத்துகள் போன்றவையும் இதில் அடங்கும்.

2024-ல் ஆக்ஸ்போர்ட் அகராதி முடிவில்லாமல் ஸ்க்ரோல் செய்வதால் ஏற்படும் மனச்சோர்வைக் குறிக்கும் "பிரெயின் ரோட்" (Brain Rot) அதாவது மூளை அழுகல் என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருந்தது.

இந்த Brain Rot, Rage Bait ஆகிய இரண்டு வார்த்தைகள் குறித்து ஆக்ஸ்போர்ட் அகராதியின் தலைவர் காஸ்பர் கிராத்வோல், "ஒருவர் அதிகம் ஸ்க்ரோல் செய்கிறார் என்றால் அவருக்குக் கோபப்படும்படியான கண்டென்ட்கள் அதிகம் காண்பிக்கப்படும். அதனால் அதிக ஈடுபாட்டுடன், கோபப்பட்டு கமெண்ட், லைக் எனக் கொடுத்துக்கொண்டிருப்பார்.

Oxford Union Society
Oxford Union Society

அதை அல்காரிதம் மேலும் அதிகரிக்கும். அதனால் அவர் தொடர்ச்சியாக ஸ்க்ரோல் செய்துகொண்டிருப்பார். அதன் காரணமாக மனம் சோர்வடையும். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒருவரின் சமூக ஊடகப் பயன்பாட்டின் மாபெரும் சுழற்சியைக் குறிக்கும் வார்த்தைகள். இந்த வார்த்தைகள் வெறும் டிரெண்ட் மட்டுமல்ல - டிஜிட்டல் தளங்கள் நம் சிந்தனையையும் நடத்தையையும் எப்படி மாற்றுகின்றன என்பதைக் காட்டுகின்றன" என்கிறார்.

ஆக்ஸ்போர்ட் அகராதி இந்த ஆண்டுக்கான சிறந்த வார்த்தையாக Rage Bait என்ற வார்த்தையைத் தேர்வு செய்ததுபோல, காலின்ஸ் அகராதி AI உதவியுடன் கம்ப்யூட்டர் கோட் எழுதும் "வைப் கோடிங்" (Vibe Coding) என்ற வார்த்தையையும், கேம்பிரிட்ஜ் அகராதி தெரியாத பிரபலங்களுடன் ஆன்லைனில் ஒருதலைப்பட்ச நட்பு வைத்துக்கொள்ளும் "பாராசோஷியல்" (Parasocial) என்ற வார்த்தையையும் தேர்வு செய்திருக்கின்றன.

Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் 'சேகர்' எனச் சேர்த்திருக்கிறேன்" - எலான் மஸ்க்

"WTF is" பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன்... மேலும் பார்க்க

`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன நம்பரும்!

ஹரியானா மாநிலத்தில் வாரந்தோறும் VIP அல்லது ஃபேன்சி வாகன எண் பலகைகளுக்கான ஆன்லைன் ஏலம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்... மேலும் பார்க்க

``மனிதர்களையே அடித்துக் கொல்லும்போது, விலங்குகள் மீது எப்படி கருணை வரும்?" - நடிகை நிவேதா பெத்துராஜ்

தெருநாய்களை பாதுகாக்க கோரி 'விலங்குகளுக்கான சொர்க்கம்' என்ற அரசு சாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டை, லாங்ஸ் கார்டன் சாலையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துக... மேலும் பார்க்க

``AI என் பதவியைக் கூட பறித்துவிடும்" - AI குறித்து வெளிப்படையாக பேசிய சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) பதவியைக் கூட எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பிபி... மேலும் பார்க்க

``20 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" - ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்... மேலும் பார்க்க

Sachin Tendulkar: ``பாபாவின் ஆசீர்வாதத்தால் மட்டுமே சாத்தியமானது" - புட்டபர்த்தியில் சச்சின் உரை

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ... மேலும் பார்க்க