செய்திகள் :

Rain Alert: 'குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது' தமிழ்நாட்டில் 27-ம் தேதி வரை கனமழை!

post image

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.

தற்போது இந்திய வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு குறித்த வானிலை அப்டேட்...

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக,

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 27-ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், இன்று (அக்டோபர் 23, 2026) தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை
மழை

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது!

நேற்று (அக்டோபர் 22, 2026) குமரிக்கடல் மற்றும் தெற்குத் தமிழ்நாடு-கேரளா பகுதிகளின் மேல் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை 8:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் நிலவுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் முதல் வடக்குக் கடலோரத் தமிழ்நாடு வரை கீழடுக்கு வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

வடகிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் கீழடுக்கு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது.

அக்டோபர் 24-ம் தேதி முதல் வடமேற்கு இந்தியப் பகுதிகளை ஒரு புதிய மேற்கத்திய இடையூறு (Western Disturbance) பாதிக்க வாய்ப்புள்ளது.

இதனால்,

அக்டோபர் 23-25: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 26-29: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இந்திய வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
இந்திய வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை

காற்றின் வேகம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 23 முதல் 26-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் (இடையிடையே 60 கி.மீ. வேகம் வரை), கடலோர ஆந்திரா, யானம் மற்றும் இராயலசீமா பகுதிகளில் அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும்.

அர்னாப் புயல் வருகிறது? `வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி' - மழை தீவிரமாகும் வாய்ப்பு! | Live

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிதமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் த... மேலும் பார்க்க

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு; தாய் காயம் - சாத்தூர் சோகம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெய்த பலத்த மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் மாணவியின் தாயும் காயமடைந்துள்... மேலும் பார்க்க

Rain Alert: கொட்டித் தீர்த்த கனமழை; 26 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், கோவை, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் ... மேலும் பார்க்க

'வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி' - தமிழகத்தில் 26-ம் தேதி வரை மிகக் கனமழை!

2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதி வரை கொளுத்திய வெயில், இப்போதுதான் லீவு எடுத்திருக்கிறது.கடந்த வாரத்திலிருந்து தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.நேற்று (அக்டோபர் 21) இந்திய வானிலை மைய... மேலும் பார்க்க

Rain Alert: 5 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை; உங்க ஊரில் கனமழையா, மிகக் கனமழையா?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழையோடு, சில மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் இன்று (அக்டோபர் 22) காலை விடிந்திருக்கிறது.சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின்படி,இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

`26-ம் தேதி வரை மழை... இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்' - வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்!

வரும் அக்டோபர் 26ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு கடல் மற்றும் ... மேலும் பார்க்க