செய்திகள் :

Rain Alert: கொட்டித் தீர்த்த கனமழை; 26 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன?

post image

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை, விருதுநகர், கோவை, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பதிவாகியுள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி, காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சாத்தூரில் 2 மணி நேரமாகப் பெய்த இடி மின்னலுடன் கூடிய கனமழையால் காவல் நிலைய வளாகம் மற்றும் சாலைகளில் நீர் தேங்கியது. சிவகாசி மற்றும் கரூரிலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

மழை
மழை

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் பெய்த கனமழையால் பார்வைத் திறன் குறைந்து, 4 கார்கள், ஒரு ஜீப் மற்றும் அரசுப் பேருந்து என 6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில் காரில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாநகரில் முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. திருப்பூர் திருமூர்த்தி மலையில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தைச் சூழ்ந்தது.

அதேவேளையில், ராஜபாளையம் ராக்காச்சியம்மன் கோயில் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, மஞ்சளாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு, உக்கடம் உள்ளிட்ட மாநகர் முழுதும் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. திருவள்ளூர் மாவட்டத்திலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

மழை
மழை

இந்த நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதனுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் புகா் பகுதிகளிலும் இன்றும் நாளையும் (அக். 23, 24) இரு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை
மழை

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் வானிலை முன்னறிவிப்புகளைப் பின்பற்றிச் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி' - தமிழகத்தில் 26-ம் தேதி வரை மிகக் கனமழை!

2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதி வரை கொளுத்திய வெயில், இப்போதுதான் லீவு எடுத்திருக்கிறது.கடந்த வாரத்திலிருந்து தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.நேற்று (அக்டோபர் 21) இந்திய வானிலை மைய... மேலும் பார்க்க

Rain Alert: 5 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை; உங்க ஊரில் கனமழையா, மிகக் கனமழையா?

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழையோடு, சில மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் இன்று (அக்டோபர் 22) காலை விடிந்திருக்கிறது.சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின்படி,இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

`26-ம் தேதி வரை மழை... இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்' - வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்!

வரும் அக்டோபர் 26ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு கடல் மற்றும் ... மேலும் பார்க்க

Rain Alert: சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு லீவ்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வருகிற 26-ம் தேதி வரை, தமிழ்நாட்டில் அதிக கனமழை முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.எங்கெல்லாம் மழை?செ... மேலும் பார்க்க

Rain Alert: உருவாகிறதா குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி? அக். 26 வரை கனமழை; உங்க ஊரில் எப்போது?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. தற்போது இந்திய வானிலை மையம் கொடுத்துள்ள எச்சரிக்கையின்படி, "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தி... மேலும் பார்க்க

Rain: அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக். 20)" புதுக்கோட்டை, தஞ்சாவூர், தி... மேலும் பார்க்க