செய்திகள் :

RCB vs LSG: "க்ருணால் பாண்டியா பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது" - ரஜத் பட்டிதார்

post image

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற பெங்களூரு vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி ஒன் சைடு போட்டியாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ 147 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதை 15.1 ஓவர்களிலே எட்டி பிடித்து அபார வெற்றி பெற்றது பெங்களூரு அணி.

rcb vs lsg
rcb vs lsg

போட்டிக்குப் பிறகு வெற்றி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், "எங்களது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. டாஸ் வென்றது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது என்று நினைக்கிறேன்.

க்ருணால் பாண்டியா மிகவும் தைரியமான பந்துவீச்சாளர். அவர் அடுத்த பந்தை எப்படி வீசுவார் என்று எனக்கே தெரியாது, அதே நேரத்தில், சுயாஷின் 'ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப்' பந்துவீச்சு பார்க்க பிரமாதமாக இருந்தது.

புவனேஷ்வர் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் பந்துவீச்சு பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு கேப்டனுக்கு டி20 லீக் போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் கிடைத்தால் அது வேலையை எளிதாக்கும், ஏனென்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

rcb vs lsg
rcb vs lsg

அவர்களின் அனுபவமும் யோசனைகளும் மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் உதவுகின்றன. ஐபிஎல் தொடக்கத்திலிருந்தே, நாங்கள் ஃபீல்டிங்ல் கவனம் செலுத்தி வருகிறோம்.

பட்டத்தை வெல்வதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. தற்போது, நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டுமே உற்று நோக்குகிறோம்" என்று பேசியிருக்கிறார்.

அனுபவத்தை முறியடிக்கும் வேகம்; ஐபிஎல் 2026-ஐ அதிரவைக்கும் Gen Z நட்சத்திரங்கள் ஒரு பார்வை!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பது எப்போதும் திறமைகளை அடையாளம் காணும் ஒரு களமாகவே இருந்து வருகிறது. ஆனால், 2026 சீசன் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. கிரிக்க... மேலும் பார்க்க

MI VS PBKS: பறந்து கேட்ச் பிடித்த ஷ்ரேயஸ்; வாயடைத்துப் போன ரோஹித், சூர்யகுமார்; ஷாக் ஆன MI! | வீடியோ

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிடித்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.குறிப்... மேலும் பார்க்க

MI vs PBKS: "இப்போ என்ன சொல்றதுனே தெரியவில்லை..." - தொடர்ச்சியான தோல்விகள் குறித்து ஹர்திக் வேதனை

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் தொடர்ந்து நான்கு தோல்விகள... மேலும் பார்க்க

MI vs PBKS: "அந்தத் திறமை எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது" - வெற்றிக்கான ரகசியத்தைச் சொன்ன ஸ்ரேயஸ்!

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 16) ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்ட... மேலும் பார்க்க

RCB VS LSG: "நாங்க பேட்டிங்ல சொதப்பிட்டோம், ஆனா நாங்க மீண்டு வருவோம்" - நிக்கோலஸ் பூரன்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 15) ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, பந்து கைய... மேலும் பார்க்க

CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரி... மேலும் பார்க்க