செய்திகள் :

Rewind 2025: கண்ணகி நகர் கார்த்திகா டு திவ்யா தேஷ்​முக் வரை - ஸ்போர்ட்ஸில் சாதித்த வீராங்கனைகள்

post image

2025 ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த வருடத்தில் அரசியல், சினிமா, விளையாட்டுகள் மூலம் பலர் மக்களை கவனம் ஈர்த்திருந்தனர். அந்தவகையில் 2025-ல் விளையாட்டில் சாதித்த இந்திய வீராங்கனைகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

தீப்தி சர்மா

தீப்தி சர்மா
தீப்தி சர்மா

இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்துள்ளார் தீப்தி சர்மா. 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில், தனது அபார ஆல்-ரவுண்டர் திறமையால் தொடர் நாயகி (Player of the Tournament) விருதை கைப்பற்றியிருந்தார். மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

ஈஷா சிங்

ஈஷா சிங்
ஈஷா சிங்

உலக அரங்கில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் திறமையைப் பறைசாற்றியுள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த ஈஷா சிங். ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை போட்டியில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில், கடுமையான இறுதிப் போட்டியில் சீனாவின் நட்சத்திர வீராங்கனையைவிட 0.1 புள்ளி அதிகமாகப் பெற்று, உலகக் கோப்பையில் தனது முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

குஷி

குஷி
குஷி

பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில், இளம் வீராங்கனை குஷி மல்யுத்த விளையாட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருந்தார்.

பிரதீஸ்மிதா போய்

பிரதீஸ்மிதா போய்
பிரதீஸ்மிதா போய்

2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இளம் பளு தூக்கும் வீராங்கனை பிரதீஸ்மிதா போய் இந்தியாவின் பெருமையாகத் திகழ்ந்துள்ளார். 44 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 92 கிலோ எடையைத் தூக்கி, புதிய உலக இளைஞர் சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.

மதுரா தாமங்காவ்கர்

மதுரா தாமங்காவ்கர்
மதுரா தாமங்காவ்கர்

இந்திய வில்வித்தை வீராங்கனை மதுரா தாமங்காவ்கர் தனது துல்லியத்தால் உலகில் புதிய முத்திரையைப் பதித்துள்ளார். ஷாங்காயில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை – இரண்டாம் கட்டப் போட்டியில், பெண்களுக்கான கம்பவுண்ட் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருந்தார்.

ஜாஸ்மின் லம்போரியா

ஜாஸ்மின் லம்போரியா
ஜாஸ்மின் லம்போரியா

இந்திய மகளிர் குத்துச்சண்டை வரலாற்றில் மேலும் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதியுள்ளார் ஜாஸ்மின் லம்போரியா. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 57 கிலோ (ஃபெதர் வெயிட்) பிரிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையாக உயர்ந்துள்ளார்.

நிகத் சரீன்

நிகத் சரீன்
நிகத் சரீன்

உலக குத்துச்சண்டை அரங்கில் இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் முன்னணி வீராங்கனை நிகத் சரீன். கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற உலகக் குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டியில், பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ரினீ நோரோன்ஹா

ரினீ நோரோன்ஹா
ரினீ நோரோன்ஹா

இந்தியாவின் நீடித்து நிற்கும் விளையாட்டு (Endurance) வரலாற்றில் புதிய சாதனையைப் பதித்துள்ளார் ரினீ நோரோன்ஹா. உலகளவில் மிக உயர்ந்த தரத்தில் நடத்தப்படும் IRONMAN 70.3 ட்ரையத்லான் போட்டியில் பட்டம் வென்று, இந்தக் கடினமான நீடித்து நிற்கும் விளையாட்டில் சாதித்த முதல் சில இந்தியப் பெண்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

ஸ்குவாஷ் அணி

ஸ்குவாஷ் அணி
ஸ்குவாஷ் அணி

இந்திய ஸ்குவாஷ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் அனாஹத் சிங். இவர்களின் அபார செயல்பாட்டால், இந்திய ஸ்குவாஷ் அணி SDAT (எஸ்டிஏடி) ஸ்குவாஷ் உலகக் கோப்பையை முதல் முறையாகக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கோங்காடி த்ரிஷா

கோங்காடி த்ரிஷா
கோங்காடி த்ரிஷா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் கோங்காடி த்ரிஷா. 2025 ஐசிசி பெண்கள் U19 T20 உலகக் கோப்பை தொடரில், தனது அபார ஆட்டத்தால் தொடர் வீராங்கனை (Player of the Tournament) விருதைக் கைப்பற்றி இந்தியாவின் பெருமையாக உயர்ந்துள்ளார்.

பூஜா சிங்

பூஜா சிங்
பூஜா சிங்

ஆசிய தடகள அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார் தடகள வீராங்கனை பூஜா சிங். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் உயரம் தாண்டுதல் (High Jump) பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கு முக்கியமான சர்வதேச சாதனையைப் பெற்றுத் தந்துள்ளார்.

பருல் சவுத்ரி

பருல் சவுத்ரி
பருல் சவுத்ரி

இந்திய தடகள வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார் பருல் சவுத்ரி. 2025 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில், மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் ஓட்டம்) பிரிவில் பங்கேற்று, புதிய தேசிய சாதனையைப் படைத்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கீர்த்தனா

கீர்த்தனா
கீர்த்தனா

கேரம் உலகக்கோப்பை போட்டியில், மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்று சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

கார்த்திகா

கார்த்திகா
கார்த்திகா

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

திவ்யா தேஷ்​முக்

திவ்யா தேஷ்​முக்
திவ்யா தேஷ்​முக்

 ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக், சகநாட்​டைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான கோனேரு ஹம்​பியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்​தார்.