செய்திகள் :

RR vs CSK: "இந்த வருடம் கோப்பையை வெல்வதுதான் எங்களுடைய ஒரே இலக்கு" - கேப்டன் ரியான் பராக்

post image

நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த ஸ்கோரை 12.1 ஓவர்களில் எட்டி பிடித்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்நிலையில் அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், "டாஸ் வென்றது எங்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. நாங்கள் திட்டமிட்டபடி விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.

RR vs CSK
RR vs CSK

சிஎஸ்கே அணி வருவதற்கு முன்பே மைதானத்தில் ஓரிரு நாட்கள் நாங்கள் பயிற்சி செய்தோம்.

சிவப்பு மண் ஆடுகளம் மற்றும் மழை காரணமாக இருந்த ஈரப்பதம் பந்துவீச்சாளர்களுக்குக் கைகொடுத்தது.

எங்களது பந்துவீச்சாளர்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினர். நான் முழு நேர கேப்டன் ஆக இருப்பது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

கேப்டன் ஆக இருப்பது எனக்கு ஒரு மிக பெரிய பொறுப்பு. இந்த வருடம் கோப்பையை வெல்வதே எங்களுடைய ஒரே இலக்கு.

அதற்காகத் திட்டமிடுவதிலும், வியூகங்களை வகுப்பதிலும் அதிக நேரம் செலவிட்டுள்ளோம்.

நான் முன்பே ஒரு பேட்டியில் சொன்னது போல, புத்திசாலித்தனமாக கிரிக்கெட் விளையாடும் ஒரு அணியாக இருக்க விரும்புகிறோம்.

RR கேப்டன் ரியான் பராக்
RR கேப்டன் ரியான் பராக்

களத்தின் சூழலைச் சரியாகக் கணித்து அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என நினைக்கிறோம்.

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறோம்" எனப் பேசியிருக்கிறார்.

RR vs CSK: "இனிவரும் போட்டிகளில் எங்க ஆட்டம் சிறப்பாக இருக்கும்!" - ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 30) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை... மேலும் பார்க்க

RR vs CSK: "சிவம் துபே அப்படி முயற்சிப்பார் எனத் தெரியும்" - சிஎஸ்கே எதிரான போட்டி குறித்து ஜடேஜா

நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கேவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.இதில... மேலும் பார்க்க

MI vs KKR: "எனக்கு சவால்கள் என்றால் பிடிக்கும்; அவைதாம் என்னை உருவாக்கின" - ஷர்துல் தாகூர்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச்.29) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இதில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி ... மேலும் பார்க்க

MI vs KKR: "இந்த வெற்றி எங்களின் நீண்ட நாள் காத்திருப்பு"- கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச்.29) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் மோதின. இதில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி... மேலும் பார்க்க

MI vs KKR: 13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வென்று அசத்திய மும்பை அணி!

13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். MI vs KKRமும்பை அணியில் ரோஹித... மேலும் பார்க்க

IPL: முதல்முறையாக சாம்பியனாக களம் காணும் RCB; பேட்டிங் ஓகே, பந்துவீச்சு? - அதிர்ச்சி கொடுக்குமா SRH?

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 19-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில், ... மேலும் பார்க்க