செய்திகள் :

RTI-ல் சட்டம் - ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு - திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு!

post image

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு குறித்து பதில் பெற முடியாது என்று தவெக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.

சட்டம் ஒழுங்கு இன்டலிஜன்ஸ் கீழ் வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

அரசின் இந்த அறிவிப்பிற்கு, “சட்டம் & ஒழுங்கு தொடர்பான விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமையிலிருந்து விலக்கு அளிப்பது, அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைப் பாதிக்கும் நடவடிக்கையாக அமையும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

மக்களின் உரிமைக்குரல்களும், போராட்டங்களும் ஜனநாயக வழியில் அணுகப்பட வேண்டுமே தவிர, அவற்றை ஒடுக்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படக் கூடாது.

சட்டம் & ஒழுங்கு என்ற பெயரில் தகவல்கள் மறைக்கப்படுவது பொதுமக்களின் கேள்வி கேட்கும் உரிமையைப் பலவீனப்படுத்தும்” – நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,

“‌ ‘வெளிப்படையான அரசு’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களைக் கேள்வி கேட்கக்கூடாது என்கிறது.

500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்யத் திறனற்ற அரசு, இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது.

இதுதான் மாற்றமா?" – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி...

என்று எதிர்க்கட்சிகள் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

இதையடுத்து தற்போது RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது தமிழ்நாடு அரசு.

`மகனுடன் சேர்ந்து ஏரி மண் திருட்டு' - திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

கடந்த 14-12-2025 அன்று, தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக்கான மாநாடு திருவண்ணாமலை அருகேயுள்ள மலப்பாம்பாடியில் நடைபெற்றது. இதற்கான மொத்த ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர் அப்போதைய அம... மேலும் பார்க்க

"நவம்பருக்கு பின் ஈரான் மீது கடும் தாக்குதல்" - 'மீண்டும்' அந்தர்பல்டி அடிக்கும்‌ ட்ரம்ப்!

கடந்த வார இறுதியில் ஈரான் போர் குறித்து ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது’ என்று இனிப்புச் செய்தி சொன்னார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, ஐக்கிய நாடுகளி... மேலும் பார்க்க

கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் - நிதி நிறுவன தேர்தல் காரணமா..?

தவெக-வின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம். இவர் நேற்று இரவு கோடையான் தோட்டம் அருகே காரில் சென்றுள்ளார். கார் இருட்டான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டூவீலரில் வந்த மூன்று நபர்கள்... மேலும் பார்க்க

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்

தமிழ்நாடு அரசு தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சட்ட ஒழுங்கை நீக்கியுள்ளது.அதாவது, இனி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த எந்தக் கேள்விக்கான பதிலையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின... மேலும் பார்க்க

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி - தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!

தவெக அரசு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துகொள்ளவதை தற்போது நீக்கியுள்ளது.இந்த மாற்றத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்... மேலும் பார்க்க

'இனி சட்ட ஒழுங்கு குறித்து RTI-ல் கேட்க முடியாது' - மாற்றங்கள் ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு

சமீப காலமாக, தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவெக அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன.இந்த நேரத்... மேலும் பார்க்க