செய்திகள் :

Sarathkumar: "நீதான் இறுதிவரை என் அன்புக் காதலி ராதிகா!" - சரத்குமார் ஜாலி டாக்

post image

2025-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றிருந்தது. அந்த விருது நிகழ்வின் காணொளிகள் அடுத்தடுத்து நம் சினிமா விகடன் சேனலில் வெளியாகி வருகின்றன.

இந்த நிகழ்வில், சிறந்த வில்லனுக்கான விருதை 'டியூட்' படத்திற்காகச் சரத்குமார் பெற்றார். மேடையில் பேசியவர், ‘புலன் விசாரணை’ படத்தில் வில்லனாக அறிமுகமான நாட்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

சரத்குமார் - அவர் மகன்
சரத்குமார் - அவர் மகன்

மேடையில் பேசியவர், "லைஃப்ல நான் முதன்முதல்ல வில்லனாகத்தான் அறிமுகமானேன். அதற்கு வாய்ப்பு தந்த என்னோட அன்பு சகோதரர் விஜயகாந்துக்கு நன்றி சொல்லணும்.

'புலன் விசாரணை' படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது என்னைப் பார்த்தவர்கள், “மீசை இல்லாமல் இருந்தால் இவர் எப்படி இருப்பார்?” என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு என் மீசையை எடுத்தப் பிறகுதான் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைச்சது. படத்தைப் பார்த்துவிட்டு விஜயகாந்த், “உனக்குத்தான் இதுல பெரிய அப்ரிசியேஷன் கிடைக்கும்” என்றார். அன்னைக்கு வில்லன். இன்னைக்கும் வில்லன்! வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.

வில்லன் ஒரு பொண்ணைப் பார்த்த உடனே ‘பிடிக்குது’னு சொல்லிடுவான். ஆனால் ஹீரோ பன்னிரண்டாவது ரீல்லதான் சொல்லுவான்" என நகைச்சுவையாகப் பேசியவர், "யாராச்சும் லவ் பண்ணிட்டு இருந்தீங்கன்னா உடனே போய்ச் சொல்லிருங்க. உடனே இம்ப்ரஸ் பண்ணிடலாம். அதற்குப் பாடம் கத்துக்கணும்னா என் கூட வாங்க, அதற்கான ஃபீஸ் இருக்கு” என்று சிரித்தபடி கூறினார்.

Sarathkumar
Sarathkumar

இதனை தொடர்ந்து ராதிகாவிடம் காதலைத் தெரிவித்த தருணம் பற்றிப் பகிர்ந்துகொண்டவர், "நான் ஒரு பெண்கூட க்ளோஸாகப் பேசிட்டு இருந்தேன். அப்போது ராதிகா என்னைப் கடந்து போனாங்க. அப்போது நான், ‘How about getting married to me?’னு கேட்டேன்.

அதுக்கு அவங்க ஒரு பதில் சொன்னாங்க... அதை இங்க சொல்லமுடியாது'' எனச் சிரித்துக்கொண்டே சொன்னவர், அரங்கில் அமர்ந்திருந்த ராதிகாவை நோக்கி, “நீதான் இறுதிவரை என் அன்புக் காதலி. என் மனைவியே ராதிகா” என்றார்.

Dhanush: "அதுதான் சந்தோஷமான நாள்கள் என அப்போ எனக்கு தெரியல"- தனுஷ் ஷேரிங்

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

Dhanush: "தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்" - நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

Kollywood: அஜித் டு கார்த்திக் சுப்புராஜ்; களைகட்டும் அப்டேட்கள் - இது கோலிவுட் புதிய அறிவிப்புகள்!

கடந்த மூன்று நாட்களாகத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, புதிய படங்களின் அறிவிப்பு எனப் பல அப்டேட்கள் அ... மேலும் பார்க்க

Dhanush: 'தனுஷ் ப்ளாக்' - படித்த பள்ளிக்கு கட்டிட உதவி செய்து கொடுத்த தனுஷ்!

நடிப்பைத் தாண்டி பொதுச் சேவைகளையும் தற்போது நடிகர் தனுஷ் அதிகமாகவே செய்து வருகிறார். அன்னதானம், ரத்த தான உதவி எனச் சமீபத்தில் தனுஷ் ரசிகர்கள் நடத்திய நிகழ்வுகள் அனைத்தும் பேசுபொருளாயின. தற்போது தான் ப... மேலும் பார்க்க

Akshara Haasan: "அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது!" - அக்ஷரா ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் நடித்திருக்கும் 'சிமுலேக்ரா' (Simulacra) திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தப் படத்திற்காக அளித்த நேர்காணல் ஒன்றில் தனது பெற்றோரின் கலைப... மேலும் பார்க்க

மும்பை எக்ஸ்ப்ரஸ் : க்ரே(ட்) காமெடி! | `சினி'ஸ்கோப் 12

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 12மும்பை எக்ஸ்ப்ரஸ்மூன்று உத்தமமான ஏழைகள், ஒரு சிறுவனைக் கடத்திவ... மேலும் பார்க்க