``சட்டமன்றத் தேர்தலில் திமுக எங்களுக்கு எதிராக உள்ளடி வேலை செய்தது" - திருநாவுக்...
Scene: "இது மலையாள சினிமாவுக்கான ஒரு சின்ன காதல் கடிதம்!” - சூர்யா
கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் 'சீன்' (Scene) படம் நவம்பர் 6 ஆம் தேதி வெளியானது.
சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை 'ரோமஞ்சம்', 'ஆவேசம்' படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சூர்யா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், "எங்களின் விக்டராக இருந்ததற்கு நன்றி டொவினோ தாமஸ். நீங்கள் அன்போடும் தாராள மனதோடும் 'சீன்' திரைப்படத்தில் நடித்ததை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சீனில் இணைந்த மலையாள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என் நன்றி. இது மலையாள சினிமாவுக்கான ஒரு சின்ன காதல் கடிதம்!” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.
Dear @ttovino , I can’t thank you enough for being our Victor. The love and generosity with which you came on board means more to me than words can express. ❤️
— Suriya Sivakumar (@Suriya_offl) November 14, 2026
And to all my wonderful co actors, technicians and creative minds from the Malayalam film industry, thank you for being… pic.twitter.com/85pzYhGCbp
















