செய்திகள் :

Sigma: ``ஜேசன் சஞ்சய் அவருடைய அப்பாவைப் போலவே இருக்கிறார்" - நடிகர் சிரஞ்சீவி

post image

தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரோடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சிக்மா - சிரஞ்சீவி - ஜேசன் சஞ்சய்
சிக்மா - சிரஞ்சீவி - ஜேசன் சஞ்சய்

அதன் தொடர்ச்சியாக, ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் நேற்று மாலை பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``சமீபகாலமாக நல்ல கருத்துள்ள திரைப்படங்களை தெலுங்கு ரசிகர்கள் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் ‘சிக்மா’ படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன். ஜேசன் சஞ்சய்யைப் பார்க்கும்போது அவரது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரை எனக்கு நினைவூட்டுகிறது.

எனது ஆரம்பகாலத்தில் 'சட்டனிகி கல்லு லேவு', 'தேவாந்தகுடு' போன்ற சிறந்த படங்களை அவர் எனக்கு இயக்கியுள்ளார். நடிகர் விஜய்யின் ஒரு படத் தொடக்க விழாவிற்கு நானும் ரஜினிகாந்தும் சென்று கைதட்டி வாழ்த்தினோம். தற்போது அதே குடும்பத்திலிருந்து வந்துள்ள சஞ்சய் என்னை அழைத்ததும் மகிழ்ச்சியுடன் வந்தேன். ஏன் தந்தையைப் போல நடிகராகாமல் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தாய் என்று சஞ்சய்யிடம் கேட்டேன். அதற்கு எனக்கு எழுதவும் இயக்கும் வேலையும்தான் பிடிக்கும் என்றார்.

சிக்மா - சிரஞ்சீவி - ஜேசன் சஞ்சய்
சிக்மா - சிரஞ்சீவி - ஜேசன் சஞ்சய்

தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர், பாட்டி சோபா ஆகியோரின் எழுத்து மற்றும் இயக்கும் திறமையின் மரபணு (Genetics) அவருக்குள்ளேயே இருக்கிறது. சஞ்சய் பார்ப்பதற்கு 1993-95 காலகட்டத்தில் விஜய் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார். அவரது தாத்தாவும் தந்தையும் திரைத்துறையில் உச்சத்தை அடைந்தது போல, ஜேசன் சஞ்சய்யும் இயக்குநராகப் பெரிய உயரத்தைத் தொடுவார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Suriya: "ஒரு முட்டாள் பதிவு போட்டான் என்பதற்காக..." - ரசிகர்கள் கூட்டத்தில் சூர்யா

சூர்யாவுக்கு 'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' என இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அத்தோடு தீபாவளி வெளியீடாக மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அவர் நடித்திருக்கு... மேலும் பார்க்க

Dorothy: "இனி படம் எடுக்க வேண்டாம் என்றிருந்தேன்; ஆனால், 'டோரதி' படம்..." - இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைத்துறையின் முக்கிய இயக்குநர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டிப் பேசி வருகிறார்க... மேலும் பார்க்க

"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" - என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6 ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.அமைச்ச... மேலும் பார்க்க

"என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" - 'மொத ராத்திரி' இயக்குநர்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’.மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​ப... மேலும் பார்க்க

'நான் தமிழ் ஈழப்பெண்'- நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பு! பின்னணி என்ன?

நெட்பிளிக்ஸில் 2020 ஆம் ஆண்டு வெளியான 'Never Have I Ever' தொடர் மூலம் புகழ்பெற்றவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். கன்னடாவில் பிறந்து வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன். தமிழ் பின்னணியைக் கொண்டவர். இலங்கை இவரது பூ... மேலும் பார்க்க

Dorothy: ``கார்த்திக் சுப்புராஜ் மீது பொறாமையாக இருக்கிறது" - இயக்குநர் மணிரத்னம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்டம்பர் 25-ம் தேதி) வெளியான படம் டோரதி. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்... மேலும் பார்க்க