Paralympics: போலியோ பாதிப்பு, சவாலான வாழ்க்கைப் பயணம்... முதல் தங்கப் பதக்கம் வெ...
"SIR அவசியம்... அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது" - சி.முருகன் IAS
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென்கிற குரல்கள் நாடெங்கும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
எஸ்.ஐ.ஆர் என்ற தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை எனவும், தேர்தல் ஆணையம் ஆளும் மத்திய அரசுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்பதும்தான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியாகப் பொறுப்பு வகித்தவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சி.முருகனிடம் பேசினோம்.
‘’எஸ்.ஐ.ஆர்-ங்கிறது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான பணிகளில் ஒன்றுதான். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வாக்காளர் பட்டியலை ஒழுங்கு படுத்துவதற்குப் பெயர்தான் எஸ்.ஐ.ஆர்.
இடம் மாறிய வாக்காளர்கள் பழைய இடத்துல இருந்து பெயரை நீக்காம விட்டிருப்பாங்க. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருக்கும். இதையெல்லாம் சரி செய்து திருத்தி புதிய பட்டியலை வெளியிட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையும் கூட.
ஆனா இந்த முறை எஸ்.ஐ.ஆர் குறித்து இவ்வளவு சர்ச்சைகள் ஏன் எப்படிங்கிறதுதான் கேள்வியா இருக்கு.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் எஸ்.ஐ ஆர் பணி தொடங்குனப்ப மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே தேர்தலுக்குப் பின்னாடி பண்ணுங்கனு சொன்னார். எஸ்.ஐ.ஆர் கூடாதுனு கோர்ட்டுக்கும் போனாங்க. ஆனா கோர்ட் அந்தக் கோரிக்கையை ஏத்துக்கலை.
எஸ்.ஐ.ஆர் கண்காணிப்பு அதிகாரியா நான் அங்க பணி புரிந்தப்ப நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டேன். எனக்கு என்ன சந்தேகம்னா, எஸ்.ஐ.ஆர் பண்ணினா நாம வெற்றி பெற முடியாதுனு ஒரு கட்சி நினைக்குதுன்னா அங்கயே ஏதோவொரு விஷயம் இடிக்குது.

அதேநேரம் தேர்தல் ஆணையத்துல தலைமைத் தேர்தல் ஆணயருக்கும் மற்ற ஆணையர்களுக்குமிடையிலான பிரச்னைங்கிற விவகாரத்துக்குள் நான் போக விரும்பல.
ஏன்னா அரசியல்வாதிகள் அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி கருத்து சொல்வாங்க. தேர்தல் ஆணையம் சரியில்லைனு எதிர்க்கட்சி சொன்னா, 2029 தேர்தலை மனசுல வச்சே எதிர்க்கட்சி பிரச்சாரம் செய்யுதுனு ஆளும் கட்சி சொல்லலாம்.
நான் என் பணியைச் செய்த வரை அரசியல் சார்பு இல்லாமதான் செய்தேன். இயந்திர வாக்குப் பதிவோ அல்லது பழைய முறையோ எதுவா இருந்தாலும் சிஸ்டத்தை மீறி வில்லங்கம் செய்ய நினைக்கிறவங்க இருக்கதான் செய்வாங்க.
எந்த முறையில வாக்களித்தாலும் வாக்காளர் பட்டியல்ங்கிறது ஆவணம். அது பக்காவா இருக்க வேண்டியது அவசியமில்லையா? அதனால எஸ்.ஐ.ஆர் எப்பவுமே அவசியமான நடவடிக்கைங்கிறதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்லை’’ என்கிறார் இவர்.

















