செய்திகள் :

SIR: ``இது மனித உரிமை மீறல்" - RSS அமைப்பின் ஆசிரியர்கள் பிரிவு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

post image

இந்தியாவில் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தம் (SIR) நடைபெறும் மாநிலங்களில் இந்த விவகாரம்தான் பேசுபொருளாக இருக்கிறது. குறிப்பாக SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் வேலைப் பளூ, அதிகாரிகளின் மிரட்டல் எனப் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

அது தொடர்பாக நம் விகடனில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி விரிவான செய்தியாக பதிவு செய்திருந்தோம். தற்போது அதே பிரச்னையை சுட்டிக்காட்டி அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மகாசங்கம் (ABRSM) தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.

SIR

கல்வித் துறையில் RSS-ன் செல்வாக்கை விரிவுபடுத்தும் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மகாசங்கம் (ABRSM) 1988ல் நிறுவப்பட்டது. பள்ளி முதல் பல்கலைக்கழக நிலை வரையிலான ஆசிரியர்களை ஒருங்கிணைப்பது இந்த அமைப்பின் முக்கியப் பணியாகும்.

மாநில அளவிலான அமைப்புகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக அளவிலான அமைப்புகள் என 24 மாநிலங்களில் இந்த அமைப்பு பரவியுள்ளது. இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கீதா பட் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "SIR செயல்முறை நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் ஒரு முக்கியமான பயிற்சி. வாக்காளர் பட்டியல்களின் துல்லியம் நியாயமான தேர்தல்களுக்கு அடிப்படை என்பதால், ஆசிரியர் சமூகம் எப்போதும் இந்த தேசியப் பொறுப்பை உண்மையாக நிறைவேற்றியுள்ளது.

இருப்பினும், BLOக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த செயல்முறை அதிகப்படியான பணிச்சுமை, 16-18 மணிநேர தினசரி களப்பணி, போர்டல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை ஆகியவற்றை எதிர்கொள்ளும் BLOக்களிடையே மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணம் அதிகரித்திருக்கிறது.

SIR
SIR

அதிகாரிகளின் தவறான நடத்தை பல மாநிலங்களில் BLO ஆசிரியர்களிடையே கடுமையான மன அழுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சில இடங்களில் துயரமான தற்கொலைகளுக்கு கூட வழிவகுத்துள்ளது.

இது ஆசிரியச் சமூகத்தை தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல், மனித உரிமை மீறலையும் குறிக்கிறது. இந்த நிர்வாக நடைமுறையை ஜனநாயக நிறுவனங்களின் நெறிமுறை தரநிலைகளுக்கு ஏற்றதாக கருத முடியாது.

இரண்டாவதாக, BLO செயலி மற்றும் போர்ட்டலின் அடிக்கடி செயலிழப்பு, நெட்வொர்க் இணைப்பு இல்லாமை, OTP தோல்விகள், தரவு பதிவேற்ற தோல்விகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி இல்லாமை போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் BLOக்கள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட வளங்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

மூன்றாவதாக குறுகிய காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சம்பளத்தை நிறுத்தி வைப்பது, அதிகாரத் தொனியில் கேட்கப்படும் மரியாதையற்ற கேள்விகள், குற்றப்பத்திரிகைகள், இடைநீக்கங்கள், FIR அச்சுறுத்தல்கள், துஷ்பிரயோக நடத்தை ஆகியவற்றையும் BLOக்கள் எதிர்கொள்கின்றனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

பணியின் போது உருவாக்கப்படும் இந்த அச்சுறுத்தும் சூழல், தேர்தல்களின் கண்ணியத்திற்கும் ஆசிரியர் சமூகத்தின் மரியாதைக்கும் முரணானது.

நான்காவதாக, BLOக்கள் பெரும்பாலும் பொதுமக்களின் கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலான மக்களிடம் அவர்களின் 20 ஆண்டு பழமையான ஆவணங்கள் இல்லை. அதனால் அவர்கள் BLOக்களுக்கு ஒத்துழைப்பதில்லை. சில சமயங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். இந்த SIR குறித்து தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு போதுமான அளவு கற்பிக்கவுமில்லை. சில இடங்களில் மக்கள் இது தேவையற்றது என்றும் நினைக்கிறார்கள்.

எனவே, மன அழுத்தமில்லாத, துல்லியமான மற்றும் தரமான பணியை உறுதி செய்ய வேண்டும் என ABRSM விரும்புகிறது. அதற்காக SIR காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். SIRன் அழுத்தம் காரணமாக மரணமடைந்த அல்லது தற்கொலை செய்து கொண்ட BLOக்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும். இதுபோன்ற அனைத்து புகார்களையும் உயர் மட்டத்தில் விசாரிக்க வேண்டும். குற்றமிழைத்த அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும்.

ABRSM அமைப்பின் பொதுச் செயலாளர் கீதா பட்
ABRSM அமைப்பின் பொதுச் செயலாளர் கீதா பட்

தொழில்நுட்ப உதவியாளர்கள், கணினி ஆபரேட்டர்கள், டேப்லெட்டுகள்/மடிக்கணினிகள், பயணக் கொடுப்பனவுகள் போன்றவற்றை BLOக்களுக்கு வழங்க வேண்டும். எந்தவிதமான அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல், துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

BLOக்களுக்கு "பணிச்சுமை, அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ப மரியாதைக்குரிய கூடுதல் கௌரவ ஊதியம் வழங்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

"தவெக வந்தவுடன் அண்ணன் செங்கோட்டையன் சொன்ன தேர்தல் வியூகம் இதுதான்" - ஆதவ் அர்ஜுனா

இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார்.கடந்த சில தினங்களாக செங்கோட்டையன் விஜய்யுடன் இணையப்போவதாக பரபரப்பான விவாதங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று ... மேலும் பார்க்க

ஆசிரியை வெட்டிக் கொலை: ``முதல்வர் ஸ்டாலின் மாய உலகில் இருக்கிறார்" - சாடும் அன்புமணி

தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை காவியா சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பா.ம.க.தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``தஞ்சாவூர் மா... மேலும் பார்க்க

``விஜய்யின் தவெக கட்சியில் நான் ஏன் இணைந்தேன்?'' - செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவா... மேலும் பார்க்க

``50 ஆண்டுகள் ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் இப்போது நம்முடன்; வெற்றி நிச்சயம்'' -விஜய்

நேற்று (நவ.26) செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.எதிர்பார்த்தபடியே இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவா... மேலும் பார்க்க

TVK: காத்திருந்த விஜய்; ஆதவ்வோடு வந்த செங்கோட்டையன்; மேற்கு மண்டல பொறுப்பு - பனையூர் பரபர

நேற்று (நவ.26) தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தார். இன்று (நவ 27) செங்கோட்டையன், அவர்களது ஆதரவாளர்கள் சிலருடன் விஜய் முன்... மேலும் பார்க்க

TVK: பனையூரில் செங்கோட்டையன்; திடீர் தள்ளுமுள்ளு; மன்னிப்பு கேட்ட ஆதவ், சி.டி.ஆர் - நடந்தது என்ன?

செங்கோட்டையன் தவெகவில் இணைகிறார் என கடந்த இரண்டு நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.இந்நிலையில் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று முன்தினம்(நவ.25) கோவையிலிருந்து சென்னை வ... மேலும் பார்க்க