செய்திகள் :

SIR: 2002/05 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய முடியாதவர்களுக்கு குட் நியூஸ்; அறிக்கை வெளியிட்ட SEC

post image

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்பணிகள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

* சிறப்பு தீவிர திருத்தப் பணியினை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் களத்தில் உள்ளனர்.

* இந்த கணக்கெடுப்புக் கட்டத்தில், தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்குக் கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

* மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* கணக்கீட்டுப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாகப் பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்க 04.12.2025 வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 09.12.2025 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

* மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டுப் படிவங்களுக்கு மிகாமல் உறுதிமொழியுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி இந்த ஜனநாயகச் செயல்பாட்டில் தங்கள் பங்களிப்பினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்

* 2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரைக் கண்டறிய இயலாத நிலையில் 04.12.2025-க்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அவ்வாக்காளரின் பெயர் 09.12.2025-ல் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

* 04.12.2025-க்குள் கணக்கீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்காத பட்சத்தில், அவ்வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.

* மூன்று முறை வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டுப் படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.

* வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைகோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

* உரிமை கோரல் மற்றும் மறுப்புரை (Claims and Objections) காலம் 09.12.2025 முதல் 08.01.2026 வரை நடைபெற உள்ளது. இக்காலகட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்குறித்து அந்த சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராகப் பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

SIR
SIR

* அறிவிப்புக் கட்டம் (Notice Phase) 09.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அவ்வகையான வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டு விசாரணை நடத்தப்படும்.

* வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரைகள் பரிசீலிக்கப்பட்டபின், இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும்.

என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொற்கை பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (60). நாச்சியார்கோயில் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு SIR பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில... மேலும் பார்க்க

மின்னணுப் பெட்டி முதல் மக்கள் மன்றம் வரை: தேர்தல் அனுபவங்கள்

அன்புள்ள வாசகர்களே,ஜனநாயகம் என்னும் ஆலமரத்தின் வேராக இருப்பது தேர்தல். ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து உங்கள் மனதில் எழும் ஆழமான சிந்தனைகள், அனுபவங்கள் மற்றும் க... மேலும் பார்க்க