GRT: இரண்டு விருதுகள்; நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ஐ வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர...
SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி!
தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முதல் கட்டம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இதில் இறந்தவர்களின் பெயர், இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் நபரின் ஒரு தொகுதியின் வாக்காளர் அட்டை மட்டும் ரத்து செய்யப்படவில்லை... சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு நவம்பர் 4-ம் தேதியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்களில் சந்தேகம் இருந்தாலும் அவர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளன.
இவர்களின் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இதோ...
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்யலாம். இதற்கு அவர்கள் புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மிஸ் செய்துவிட்டால்...
இன்றும், நாளையும் இதற்காகச் செல்ல முடியவில்லை என்றால், பரவாயில்லை. வரும் ஜனவரி 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதில் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள்.





















