Gold Rate: கிராமுக்கு ரூ.13,000-ஐ தொட்ட தங்கம்; வெள்ளி அதிரடி உயர்வு; இன்றைய தங்...
GRT: இரண்டு விருதுகள்; நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ஐ வென்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
இவ்வாண்டின் சிறந்த காதணி (நிறக்கல்) மற்றும் சிறந்த காதணி (வைரம்) நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் 2025-ல் 'இரட்டை விருது' பெற்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையை அடைந்துள்ளது ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ்.
1964 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜி ஆர் டி ஜுவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆபரண நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வந்துள்ளது.
காலத்தால் அழியாத வடிவமைப்புகள் நேர்த்தியான கைவினை நுட்பம் மற்றும் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்காகப் பாராட்டப்படும் இந்த நிறுவனம், 60 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களைக் கொண்டாடும் ஆபரணங்களை உருவாக்கும் தனது மரபை நிலைநாட்டி வருகிறது. இன்று ஜி ஆர்டி 65 ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது.

அதில் 65 தென்னிந்தியாவிலும் மற்றும் ஒன்று சிங்கப்பூரிலும் உள்ளது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள ரத்தினங்களைக் கொண்ட பரந்த கலெக்ஷன்களை வழங்கி வருகிறது.
இந்தப் பாரம்பர்ய சிறப்பினைத் தொடர்ந்து ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அக்டோபர் 25, 2025 அன்று மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற 14வது நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் (NJA) நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய விருதுகளை வென்றது.
ஆண்டின் சிறந்த காதணி 'நிறக்கல்)' மற்றும் ஆண்டின் சிறந்த காதணி (வைரம்) என்ற இரு பிரிவுகளிலும் பெற்ற இந்த இரட்டை விருது ஜிஆர்டி-யின் சிறப்பான பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக அமைந்தது.
இந்தியன் அசோசியேஷன் ஆஃப் கோல்ட் எக்சலன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ். (IAGES) மற்றும் வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (WGC) ஆகியவற்றால் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நேஷனல் ஜுவல்லரி அவார்ட்ஸ் (ANJA), ஆபரணத் துறையில் படைப்பாற்றல் கைவினை நயம் மற்றும் பதுமைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டுகளில் ஒன்றாக திகழ்கிறது ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் விருது பெற்ற வடிவமைப்புகள் அவற்றின் நேர்த்தியான கைவினை நயம் மற்றும் நிறம், அமைப்பு வடிவம் ஆகியவற்றின் அழகிய ஒத்திசைவுக்காக பாராட்டப்பட்டன.

GRT வடிவமைப்பின் மூலம் உணர்வுகளைப் பதிவு செய்யும் திறனில் ஜிஆர்டி-யின் சிறப்பை வெளிப்படுத்தின இந்த விருதுகள் மிளிரும் ஆபரணங்களைத் தாண்டி கதைகளைச் சொல்லும் ஆபரணங்களை உருவாக்கும் ஜி ஆர்டி-யின் முயற்சியைக் கொண்டாடுகின்றன.
இந்தப் பெருமைமிகு சாதனை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ஆனந்த அனந்தபதமநாபன் அவர்கள் கூறுகையில், 'இந்த இரட்டை அங்கீகாரம். எங்கள் ஒட்டுமொத்த ஜிஆர்டி குடும்பத்திற்கும் பெருமைமிகு தருணமாகும்.
நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆபரணமும் எங்கள் கலைநுணுக்கத்தின் அரப்பணிப்பையும் வாடிக்கையாளர்களின் கனவுகளையும் பிரதிபலிக்கின்றன. இந்த விருதுக்காக எங்கள் திறமையான கைவினைகலைஞர்களுக்கும் எங்களை எப்போதும் நம்பும் வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் இதை போல தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு ஜிஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது இவ்வாறான விருதுகள் எங்களைப் புதுமையைத் தொடர்ந்து மேற்கொள்ளவும்.
அதே நேரத்தில் ரம்பரியத்தில் வேரூன்றியிருக்கவும் நினைவூட்டுகின்றன இவ்விருதுகளை வழங்கி எங்களுக்கு தொடர்ந்து அங்கீகாரம் மற்றும் நம்பிக்கை அளிக்கும் NJA குழுவிற்கும் எங்கள் அன்பான வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.





















