Lokesh: "கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம்...
வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர்
இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களை வெளியேற்றியது மிக முக்கியமாக பேசப்பட்டது... மிக அதிகமாக கவனிக்கவும் பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஆம்... 11,000 இந்தியர்களை வெளியேற்றி உள்ளது சவுதி அரேபியா. அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.
ஒரு ஆண்டில் 26,400 இந்தியர்கள் வெளியேற்றம் என்பது கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கை.
ஏன் அதிகளவில் வெளியேற்றம்?
இதற்கான பதிலையும் வெளியுறவுத்துறை அமைச்சகமே வழங்கி உள்ளது.
இதற்கு கூறப்படும் முக்கியமான காரணங்கள்...
1. விசா காலம் முடிந்தும் அங்கேயே தங்குவது
2. வேலை செய்வதற்கான தகுந்த பெர்மிட் இல்லாதது
3. அந்தந்த நாட்டின் தொழிலாளர் சட்டத்தை மீறுவது
4. முதலாளிகளிடம் இருந்து சென்று விடுவது
5. அங்கே ஏதேனும் குற்றங்களில் ஈடுபடுவது
போன்ற காரணங்களுக்காக வெளியேற்றப்படுகிறார்கள் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

















