செய்திகள் :

SL vs NZ: "எதிர்மறையான சூழலை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்"- கேப்டன் தசுன் ஷனகா வேண்டுகோள்

post image

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று ( பிப். 25) இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

"நிறைய நேரங்களில் நாம் காண்பதும் கேட்பதும் எதிர்மறையான விஷயங்களாகவே இருக்கின்றன.

SL vs NZ
SL vs NZ

எதிர்மறையான சூழல்

கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் எவ்வளவுதான் நேர்மறையாக (positive) இருக்க முயன்றாலும், வெளியே எதிர்மறையான சூழலே நிலவுகிறது.

இது இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு பெரிய இழப்பு. நமக்கு இருக்கும் ஒரே விளையாட்டு இதுதான், இதை நம்மால் பாதுகாக்க முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை.

அரசாங்கத்திடம் அவர் விடுத்த வேண்டுகோள்

"ஏன் இவ்வளவு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்ப வேண்டும்? ஆம், நாங்கள் உலகக்கோப்பையில் தோற்றுவிட்டோம், அதற்கான காரணங்களும் எங்களுக்குத் தெரியும்.

எல்லோருக்கும் கவலைகள் உண்டு. அதைப்பற்றி பேசி சரி செய்வதை விட, எதிர்மறை எண்ணங்கள்தான் முன்னுக்கு வருகின்றன.

நாங்கள் விளையாடிவிட்டுச் சென்றுவிடுவோம், ஆனால் வருங்காலத்தில் வரப்போகும் வீரர்களுக்காக, அவர்களின் மனநலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த (எதிர்மறை விமர்சனங்களை) நிறுத்த முடிந்தால் அது அவர்களுக்கு நல்லது.

தசுன் ஷனகா
தசுன் ஷனகா

ரசிகர்களிடம் மன்னிப்பு

"அணி எப்போதும் சிறப்பாக செயல்படவே முயற்சி செய்கிறது. அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எங்களால் நியாயம் செய்ய முடியவில்லை. ரசிகர்களுக்கு நாங்கள் கொடுக்க நினைத்ததைக் கொடுக்க முடியாமல் போனதற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.

WI vs ZIM : வெஸ்ட் இண்டீஸின் மெகா வெற்றி, ஜிம்பாப்வேக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் சிக்கல்தான்!

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டி, இது ஜிம்பாப்வே அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தலைவலியை உருவாக்கிய ஒரு போட்டி எனலாம்.சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலா... மேலும் பார்க்க

IND vs SA : ``அவர் உண்மையான ‘டீம் மேன்’; எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்!" - கேப்டன் மார்க்ரம்

T20 தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்தியாவை சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்கா.இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்ட... மேலும் பார்க்க

முன்னாள் மனைவிக்கு 4 கோடி ரூபாய் காரை பரிசளித்த ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், நடாஷா ஸ்டான்கோவிக்கும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை: மைதானம் இல்ல; போதிய வசதிகள் இல்ல, ஆனாலும்!- ஃபைனலில் J&K அணி; இலக்கை அடைந்தது எப்படி?

​“நாங்க சும்மா விளையாட வரல... ஜெயிக்க வந்திருக்கோம்!” - 70 ஆண்டுக்கால ஏமாற்றத்தை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திரு... மேலும் பார்க்க

IND v NED : `பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன்; ஆனால்.!' - சிவம் துபே

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மற்றும் 66 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்,ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சிவம் துபே பேசியதாவது,“இந... மேலும் பார்க்க

IND VS NED: `இந்த வெற்றியில்கூட நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம்' - கேப்டன் சூர்யா குமார் யாதவ்

நெதர்லாந்து அணியுடனான கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் தோல்வியே காணாத அணியாக இந்தியா, சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.இந்த வெற்ற... மேலும் பார்க்க