'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின்
Spain: ஈரான் போரில் அமெரிக்காவிற்கு 'நோ' சொல்லும் ஒரே ஐரோப்ப நாடு - காரணமோ 'சூப்பர்'
'நாங்கள்... நாங்கள்' என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்ப நாடுகள் ஈரான் போரில் அமெரிக்கா உடன் இணைய ரெடியாக இருக்கின்றன.
ஆனால், இதில் ஸ்பெயின் மட்டும் விதிவிலக்காக அமெரிக்காவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
என்ன பிரச்னை?
ஆறாவது நாளாக ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் ஸ்பெயினின் ரோட்டா கடற்படைத் தளம் மற்றும் மோரோன் விமானத் தளத்தைப் பயன்படுத்த அனுமதி கேட்டது.
ஆனால், அதை ஸ்பெயின் அரசு அதிகாரப்பூர்வமாகவே மறுத்துள்ளது.
ஸ்பெயினின் இந்தப் பதில் நிச்சயம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிடிக்காது என்பது நம் அனைவருக்கு தெரிந்தது தான். அதனால் தான், இப்போது ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே விரிசல் உண்டாகி உள்ளது.

ஏன் ஸ்பெயின் மறுத்தது?
ஸ்பெயினின் அடிப்படைக் கொள்கையே போருக்கு 'நோ'. இதை மீறுவதற்கு ஸ்பெயின் தயாராக இல்லை.
அதனால், ஸ்பெயின் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
ட்ரம்ப் மிரட்டல்
ஸ்பெயின் 'நோ' சொல்லிவிட்டால், ட்ரம்ப் சும்மா இருப்பாரா என்ன... அவர் அவரது வேலையைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்.
ஸ்பெயின் உடன் இருக்கும் அனைத்து வர்த்தகங்களையும் ரத்து செய்யப்படும் என்று மிரட்டியிருக்கிறார் ட்ரம்ப்.
ஒருவேளை, இதை ட்ரம்ப் செய்தால் ஸ்பெயினுக்குப் பெரிய அடியாக இருக்கும். காரணம், ஸ்பெயினின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதம் அமெரிக்காவிற்குச் செல்கிறது.
ஆக, ஸ்பெயின் ட்ரம்பின் வழிக்கு வருமா... ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதலுக்கு வேறு வழியைப் பார்ப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.















