செய்திகள் :

தண்டலம்: தீராத மழைநீர் வடிகால் பிரச்னை... துரித நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?!

post image

காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஆகாஷ் நகர்ப் பகுதியில் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு, அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற வேண்டும் என்பதற்காக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டது. வடிகால் கால்வாய் அமைக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள்ளே அப்பகுதியில் மழைநீர் தேங்க ஆரம்பித்துள்ளது.

இதற்கு முறையான நீரேற்ற மற்றும் வெளியேற்ற வசதி இல்லாமல் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டியதுதான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இப்பிரச்சனை குறித்து தெரிந்து கொள்ள அப்பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தோம்.

``மழைக்காலங்களில் எங்கள் தெருக்களிலும், காலி இடங்களிலும் நீர் தேங்கி நிற்கிறது. சில நேரங்களில் வீட்டு வாசலில்கூட நீர் தேங்கி கிடக்கிறது. மழைநீரோடு கழிவு நீர், குப்பைகளும் கலந்து வருவதால் சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. இதனால் இங்கு இருக்கிற குழந்தைகளும் பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இப்படி நீர் தேங்கி நிற்பதால், தொற்று நோய் பரவும் அபாயமும் இருக்கிறது. தற்போது மறுபடியும் இந்தப் பகுதியில் இன்னொரு மழைநீர் வடிகால் அமைத்து, அதை ஏற்கெனவே இருக்கும் கால்வாயுடன் இணைக்கிறார்கள். ஏற்கெனவே சரியான வடிகால் வசதி இல்லாத நிலையில், கூடுதலாக இன்னொரு கால்வாய் அமைத்து, அதனுடைய நீரும் இந்தக் கால்வாயுடன் தேங்கி வெளியேறாமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இதனால் இன்னும் எங்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். புதிதாக கட்டப்படும் இந்த வடிகால், சாலையின் குறுக்கே அமைக்கப்படுவதால், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சாலையின் மட்டத்தை உயர்த்துகிறார்கள். இதனால் வாகனங்கள் கடந்து செல்வதற்கும் சிரமமாக இருக்கிறது. எனவே பொதுமக்களாகிய எங்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு அதிகாரிகளை வலியுறுத்துகிறோம்" என்றனர்.

மழைக்காலங்களில் நீர் தேக்கம் மற்றும் சாலை மட்ட உயர்வு ஆகிய இரண்டும் இணைந்து நிலைமை மேலும் மோசமடையக்கூடும். சுகாதாரமற்ற சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்த மக்களுக்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்? தொற்றுநோய்கள் பரவுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முறையான வடிகால் அமைத்து, நீர் வெளியேற்ற வசதிகளை ஏற்படுத்துவார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

'இதுவே அரசியல் சாணக்கியத்தனம்!' - கூட்டணிக் கடமுடா... முடிவுரை எழுதிய ஸ்டாலின்

முறிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்றி பெருமூச்சு விட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர் கூட்டணியை கட்டிக் காக்கும் விதம் மெச்சத்தகுந்தது என அரசியல் விமர்சகர்களே பாராட்டுகின்றன... மேலும் பார்க்க

ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவு: 5 நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல... மேலும் பார்க்க

கர்னாடிக் சிங்கர், ஹாக்கி ப்ளேயர், 'உம்மன் சாண்டி'யின் சிஷ்யன்! - யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?

காங்கிரஸ் தலைமையின் சாய்ஸ் கிறிஸ்டோபர் திலக்காங்கிரஸ் கட்சியிலிருந்து அழைப்பு... நாளைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யணும் உடனடியா நீங்க சென்னைக்கு கிளம்பி வரணும்,சுற்றியிருந்த நண்பர்களே ஐதராபாத்திலிருந்... மேலும் பார்க்க

மகள் நிச்சயதார்த்தம்;திடீர் நோன்பு; சோடங்கர்! - கூட்டணியை முடிப்பதற்குள் செல்வப்பெருந்தகை பட்ட பாடு!

புகைச்சலிலேயே பொழுதை ஓட்டிக் கொண்டிருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு வழியாக சுமுகமான தீர்வை எட்டியிருக்கிறது. ஆனால், இந்த கூட்டணி இறுதியாவதற்குள் அதிகம் அல்லோலகலப்பட்டது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ... மேலும் பார்க்க

`துணை முதல்வர் பதவி கேட்டோமா?' - பிரேமலதா சொன்ன பதில்!

தமிழகத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் கடந்த முறை அ.தி.மு.க கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே.வாசன் ஆகியோ... மேலும் பார்க்க

'பெரிய அண்ணன், தம்பி ஆக்கப்பட்டார்' - பிகாரில் நிதிஷின் சரிவும் பாஜக-வின் விஸ்வரூப அரசியலும்!

பீகார் அரசியலில் பல தசாப்தங்களாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய நிதிஷ் குமார், இன்று (மார்ச் 5) தனது முதல்வர் பதவியைத் துறந்து, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு (ராஜ்யசபா) நகர முடிவெடுத்திர... மேலும் பார்க்க