செய்திகள் :

SS Rajamouli: `அனுமனை அவமதிக்கும் பேச்சு' - இயக்குநருக்கு எதிராக இந்து அமைப்புகள் புகார்

post image

திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலி மீது ராஷ்டிரிய வானர சேனா அமைப்பினர் ஹைத்ராபாத்தில் உள்ள சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த வாரணாசி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்து கடவுள் ஹனுமான் பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

SS Rajamouli - Varanasi
SS Rajamouli - Varanasi

மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படம் வாரணாசி. இதன் டீசர் வெளியீட்டு விழா ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள், சினிமாதுறையினர் என 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

SS Rajamouli பேசியது என்ன?

"கடவுள்கள் மீது எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். நான் கடவுளை நம்புவதில்லை.

என் அப்பா வந்து, 'ஆஞ்சநேயர் உனக்கான எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்' என்று சொன்னார். ஆனால் பிரச்னை ஏற்பட்டபோது, அவரிடம் (தந்தையிடம்) குரலை உயர்த்தி, 'இப்படித்தானா என்னை வழிநடத்துகிறார்?' என்று கேட்டேன்.

Varanasi Movie
Varanasi Movie

என் மனைவி ஆஞ்சநேயரின் பெரிய பக்தை. அவரை தன் நண்பர் போல நினைத்து, அவரிடம் பேசுவார். 'இப்படித்தான் அவர் காரியங்களைச் செய்வாரா?' என்று அவரிடமும் என் கோபத்தை வெளிப்படுத்தினேன்." எனப் பேசியிருந்தார் ராஜமௌலி.

ராஜமௌலியின் கருத்துகள் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், திரைப்படத் துறையில் இந்து தெய்வங்களை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் ராஷ்ட்ரிய வானரசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

வானரசேனாவுடன் கௌ ரக்ஷக் சங்கமும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. புகாரில் 'மத வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன்' அவர் பேசியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

"அதை 60 நாள்கள் படமாக்கினோம்"-'வாரணாசி' படம் குறித்து ராஜமெளலி

ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.கதாநாயகியாக 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோ... மேலும் பார்க்க

Varanasi: "மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது..." - ராஜமெளலி ஷேரிங்ஸ்

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

Varanasi: "என் அப்பா சொன்னதைச் செய்திருக்கிறேன்!" - மகேஷ் பாபு

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

Globetrotter: ''இம்முறை காவல்துறை..." - ரசிகர்களுக்கு இயக்குநர் ராஜமெளலி அட்வைஸ்

ராஜமௌலியின் 'க்ளோப்டிராட்டர்' படத்தின் நிகழ்வு வருகிற நவம்பர் 15-ம் தேதி ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. மகேஷ் பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா உட்பட பலரும் இந்த... மேலும் பார்க்க

"கிட்டத்தட்ட விபத்துக்குள்ளாகும் சூழல்" - ராஷ்மிகா உடனான திகில் விமான பயணத்தை பகிர்ந்த ஷ்ரத்தா தாஸ்!

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவரும் நடிகை ஷ்ரத்தா தாஸ், ஒருமுறை விமானத்தில் பயணம் செய்தபோது மரணத்துக்கு அருகில் சென்ற அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். மும்பையில் இருந்து ஹைத்ராபாத்துக்கு பயணித்த... மேலும் பார்க்க

The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'?

முதுகலைப் பட்டப்படிப்பிற்காக வெளியூருக்கு வருகிறார் பூமா தேவி (ராஷ்மிகா). பிறக்கும்போதே தாயை இழந்த பூமா தேவி, தந்தையினால் வளர்க்கப்பட்டவர். கல்லூரியில் கணிதவியல் துறையைச் சேர்ந்த விக்ரம் (தீக்‌ஷித் ஷெ... மேலும் பார்க்க