செய்திகள் :

Stalin: "விஜய் ஆட்சி அமைக்கட்டும்; திமுக தொந்தரவு செய்யாது" - சர்ச்சைகளுக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி

post image

திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கப் போகிறது... அதிமுக ஆளும் கட்சியாகச் செயல்பட, திமுக எதிர்க்கட்சியாகச் செயல்படும்... முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்... தவெக தலைவர் விஜய்க்குக் கொடுக்கப்பட்ட கான்வாய் வாபஸ்...

இப்படி நேற்று இரவு முதல் பல செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.

அது அத்தனைக்கும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்துள்ள பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அந்தப் பேட்டியில் ஸ்டாலின், "தவெக தலைவர் ஆட்சி அமைக்கட்டும். அவரது ஆட்சியை எந்தத் தொந்தரவும் செய்யாமல் திமுக ஆறு மாதங்களுக்கு வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

விஜய் கூறியிருப்பது போல மகளிருக்கு ரூ.2,500 என்பது மிகவும் சிரமம். குறைந்தபட்சம் ரூ.1,000-த்தையாவது தொடர்ந்து தந்து வர வேண்டும்.

2021-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு, நாங்கள் கொடுத்த வாக்குறுதியைப் பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டோம். இப்போதும் கூட, செய்ய முடியக்கூடிய வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்தோம்.

ஆறு இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம். செய்தால் மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க