செய்திகள் :

'StartUp' சாகசம் 59்: எருமை வெட்டி பாளையத்தில் பிறந்து, ராணுவத்துக்கு ட்ரோன் டெமோ! - AstroX சாசக கதை

post image

இந்தியாவின் ட்ரோன் சந்தை 2025 ஆம் ஆண்டில் $0.47 பில்லியன் (சுமார் ₹3,900 கோடி) மதிப்பில் உள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் $1.39 பில்லியன் (சுமார் ₹11,600 கோடி) ஆக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது — இது ஆண்டுக்கு 24.4% வளர்ச்சி வேகத்தில் (CAGR) விரிவடையும்.

உலக ட்ரோன் சந்தை 2024 இல் ₹6,06,398 கோடி மதிப்பில் உள்ளது. அதில் இந்தியாவின் பங்கு வெறும் 0.9% மட்டுமே — இது இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய வளர்ச்சி வாய்ப்பு இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

இப்போது ஈரான் இஸ்ரேல் போரிலும், உக்ரைன்-ரஷ்யா போரிலும் ட்ரான்களின் பங்கு பெரியது

துறைகள் வாரியாக இந்தியாவில்  விவசாய ட்ரோன் சந்தை 2024 இல் $145.4 மில்லியன் மதிப்பில் இருந்து 2030 ஆம் ஆண்டில் $631.4 மில்லியனாக வளரும் — இது 28.1% CAGR வளர்ச்சியாகும். பூச்சிக்கொல்லி தெளிப்பு (Pesticide Spraying), பயிர் கண்காணிப்பு (Crop Monitoring), மண் ஆரோக்கிய மதிப்பீடு (Soil Health Assessment) ஆகியவற்றில் ட்ரோன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.

  • விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடுகள்:

  • இராணுவம் & பாதுகாப்பு (Defence & Security) 

  • விநியோகம் & வணிகம் (Logistics & Delivery)

  • கட்டுமானம் & உள்கட்டமைப்பு (Construction & Infrastructure)

  • சுகாதாரம் (Healthcare)

  • கடல் & மீன்பிடி (Maritime & Fisheries)

  • சுற்றுச்சூழல் & பேரிடர் மேலாண்மை (Environment & Disaster Management)

  • ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி (Smart City Development), 

  • சுற்றுச்சூழல் கண்காணிப்பு (Environmental Monitoring)

  • பேரிடர் மேலாண்மை (Disaster Management) 

  • தொழில்நுட்பம் & பொழுதுபோக்கு (Technology & Entertainment)

சவால்கள் (Challenges)

இந்தியாவில் சுமார் 515 ட்ரோன் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இராணுவ தரமான ட்ரோன்களை (Military-Grade Drones) உருவாக்கும் திறன் வெறும் 3-4 நிறுவனங்களுக்கு மட்டுமே உள்ளது. சிறிய ட்ரோன்களுக்கான Flight Controllers 90% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

- Core Technology — இன்னும் அதிகமாக இறக்குமதியை (Import) சார்ந்துள்ளது

- பயிற்சி பெற்ற Pilots — நாடு முழுவதும் போதுமான அளவு இல்லை

- Battery Technology — பறக்கும் நேரம் (Flight Time) இன்னும் குறைவு

- BVLOS Regulations — பார்வைக்கு அப்பால் பறக்கும் விதிமுறைகள் தாமதம்


இந்தியாவின் ட்ரோன் சந்தை 2024 முதல் 2030 வரை சுமார் 20% CAGR வளர்ச்சி வேகத்தில் விரிவடையும். தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகியவை இந்தியாவின் முக்கிய ட்ரோன் உற்பத்தி மையங்களாக (Hubs) உருவெடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் புதியதாக பல நிறுவனங்கள்  செயல்பட்டு வந்தாலும் இரு சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் இருந்து  அஸ்ட்ரோ எக்ஸ் என்ற நிறுவனம் பல்வேறு வகையான ட்ரான்களை உருவாக்கிவருகிறது. ராம்ராஜ், விமான பொறியியல் பட்ட படிப்பு படித்த இவரும், ராம் குமார் இவரின் சகோதரர் இருவரும் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்திவருகின்றனர்.

இந்த வாரம் அஸ்ட்ரோ எக்ஸ் சாகசக்கதையைத்தான் பார்க்க உள்ளோம். அவர்களின் சாகசக்கதையை நிறுவனத்தின் நிறுவனர் ராம்ராஜ் மணி சொல்ல கேட்போம்...

ராம்ராஜ் மணி
ராம்ராஜ் மணி
`ட்ரோன் நிறுவனம் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது? முதல் Spark என்ன?'

``நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். திருவள்ளூரில் உள்ள பழைய எருமை வெட்டி பாளையம். என் உலகம் — அந்த கிராமம் தான்… ஆனால் அங்கிருந்து எனக்குத் தோன்றியது எல்லாமே வானம் எனும் கனவுதான்.

ஆரம்பத்தில் ட்ரோன் என்றால் ஒரு Flying Machine (பறக்கும் இயந்திரம்) மாதிரி தான் நினைத்தேன். ஆனா நான் Aeronautical Engineering (வான்வழிப் பொறியியல்) படிக்கும்போது தான் புரிந்தது — ட்ரோன் என்பது ஒரு இயந்திரம் இல்லை… அது ஒரு முழுமையான Intelligence (அறிவு) கொண்ட ஒரு முழுமையான System (அமைப்பு) என்பதை புரிந்துகொண்டேன்.

அந்த நேரத்தில்தான் கொரோனா வந்தது. அப்போது ட்ரோனுக்கு தேவை இருந்தது. வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் ஒரு ட்ரோன் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, உணவு விநியோகத்திற்கான ஒரு ட்ரோன் உருவாக்கம் செய்தோம். அப்போது இருந்து கிடைத்த அனுபவங்களை வைத்துத்தான் இராணுவம் வரை எங்களால் பணியாற்ற முடிகிறது.

அதன்பின் பல நேரங்களில் பல கேள்விகள் பிறந்தன — கேள்விகளால் புதிய தயாரிப்புகளும் பிறந்தன.

நாங்கள் வந்த நேரத்தில் இந்தியாவில் ட்ரோன்கள் பறக்கின்றன… ஆனால் இந்தியாவில் ட்ரோன்கள் உருவாகவில்லை. ஒரு விமான பொறியியல் மாணவனாக எனக்குத் தோன்றிய கேள்விகள்:

அதிகமாக Import (இறக்குமதி), Assemble (பொருத்துதல்) — ஆனால் Core Technology (முதன்மை தொழில்நுட்பம்) நம்மிடம் இல்லை.

அந்த ஒரு Thought (எண்ணம்) என்னை அமைதியாக இருக்க விடவில்லை:

"நாமே Build (கட்டமைக்க) பண்ண முடியாதா?"

"ஒரு நாள் உலகத்தரம் வாய்ந்த ட்ரோன்களை இந்தியாவிலிருந்து உருவாக்க முடியாதா?"

அந்த கேள்வி — அது என் வாழ்க்கையை மாற்றிய தீப்பொறி. அதிலிருந்து தான் ASTROX ஆரம்பம்."

`ஆரம்ப சவால்கள் & அதை எப்படி கடந்து வந்தீர்கள்?'

``இந்த பயணம் எளிதாக இல்லை… பல நேரங்களில், கிட்டத்தட்ட இயலாதது போல இருந்தது. குறிப்பாக தொழில்நுட்ப சிக்கல்களில் நிறைய பிரச்னைகள் வந்தது.

Technical Side (தொழில்நுட்பம்):

- Stability (நிலைத்தன்மை) இல்லை,

- GPS Accuracy (துல்லியம்) பிரச்சனை,

- Payload Balance சிக்கல்கள்

- System Failures 

என பல சிக்கல்கள் பிறந்தது, அதை எங்கள் தொழில்நுட்ப குழு, துறை சார் வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றி சரி செய்தோம்

Market Side (சந்தை பக்கம்) :

- நாங்கதான் செய்தது எனயாரும் நம்ப மாட்டாங்க, அடுத்து

- "இந்தியா Build (உருவாக்கியது) பண்ணது Reliable (நம்பகமானதாக) ஆகுமா?"என்ற கேள்வி

இதற்கு நாங்கள் போய் பல முறை டெமோ செய்தோம். அதன் பின்னரே இது தீர்வாக கிடைத்தது. இப்படி சந்தேகங்கள் எல்லாவற்றையும் நாங்கள் ஒவ்வொன்றாக தீர்வுகளை காண ஆரம்பித்தோம். புதிய வழிமுறைகளை கண்டறிந்தோம். 

- பகல், இரவு தெரியாமல் சோதனை,  ஒவ்வொரு தோல்வியும் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டோம்,  சிறிய வெற்றிஎங்களை பெரிய நம்பிக்கைநோக்கி போக வைத்தது.... இப்படி சின்ன சினன் வெற்றிகளை ஒருங்கிணைத்து பெரிய வெற்றியாக மாற்றினோம்.

ஒரு மேற்கோள் எங்களை எப்போதும் முன்னேற்றியது

"வெற்றி ஒரு நாள் வரும்… ஆனால் தொடர்ச்சி தினமும் வரணும்."

``சந்தையில் உங்கள் தயாரிப்புகளுக்கான சேவை எப்படி மதிப்பீட்டிர்கள்? அதை சரியான வேலிடேசன் செய்தீர்களா?

``நாங்கள் அலுவலகம்ல உட்கார்ந்து Product (தயாரிப்பை) Build பண்ணல.

நாங்கள் Field (களம்) க்கு போனோம். பல நூறு விவசாயிகளிடம் நேரடியாகப்போய் விவசாய நிலத்தில் நின்று Drone Test (ட்ரோன் சோதனை) பண்ணினோம். அதற்கான துறை வல்லுநர்கர்களைக் கொண்டு சரி பார்த்தோம். அவர்கள் சொன்ன ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினோம்.

- Real Surveillance Use-Case (நேரடி கண்காணிப்பு பயன்பாடு) ல் Deploy பண்ணினோம்…

- Delivery (விநியோகம்) யை Real Conditions (நேரடி சூழல்கள்) ல் Validate (சரிபார்க்க) பண்ணினோம்.

வாடிக்கையாளர்கள் சொன்ன ஒரு வாக்கியம் தான் எங்களுக்கு மிகப்பெரிய சரிபார்ப்பு

 "இது நன்றாக வேலை செய்கிறது."

Pitch Deck இல்ல… செயல்திறன் தான் எங்கள் சான்று"

``StartupTN நிதி ஆதரவு உங்கள் நிறுவனத்தில் எப்படி தாக்கத்தைக் கொடுத்தது?"

``StartupTN Support எங்களுக்கு Funding (நிதி) மட்டும் இல்லை — அது ஒரு நம்பிக்கை , StartupTN கொடுத்த ஒரு கோடி  எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கு உயிர் ஊட்டியது, எங்கள் குழுவிற்கு  வலிமை கொடுத்தது, எங்கள் தொலைநோக்கு திட்டத்திற்கு வேகம் கொடுத்தது.

"நம்மை நம்முடைய அரசு நம்புகிறது… அதுவே எங்களுக்கு பெரிய சக்தி." என்பதுதான் பெரிய உத்வேகத்தை கொடுத்தது.

 "Made in India" என்பது ஒரு முழக்கம் இல்லை — அது ஒரு பொறுப்பு என்பதை நாங்கள் உணர்ந்து செயல்படுகிறோம், அந்த எண்ணம் எல்லாரையும் ஈர்த்து எங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது."

``இந்திய இராணுவத்திற்கு உங்கள் ட்ரான் டெமோ காட்டிய அனுபவம் அப்படி இருந்தது?"

``கிராமத்தில் இருந்து வந்த நான்… நான் உருவாக்கிய தயாரிப்பை இந்திய இராணுவம் பயன்படுத்துகிறது.

அந்த உணர்வு சொல்ல முடியாத ஒன்று. அதை நாங்கள் வெற்றியாக பார்க்கவில்லைஅது ஒரு பொறுப்பு.

நம் இராணுவத்திற்கு  Border Conditions (எல்லை சூழல்கள்), கடுமையான குளிர், Signal (சமிக்ஞை) இல்லாத பகுதிகள், Zero Error Tolerance (பூஜ்ய பிழை சகிப்புத்தன்மை), எல்லா இடங்களிலும் சிறப்பாக இயங்கும் டிரோனை எங்களாலும் உருவாக்க முடிந்து நம் நாட்டிற்கும் பணியாற்ற முடிகிறது என்பதும் எங்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் ஊக்கம். அரசுக்கு சப்ளை செய்வது என்பது எல்லாருக்கும் பெரிய கனவுதான். தரமான தயாரிப்பு இருந்தால் எல்லா இடங்களிலும் நாம் வெற்றி பெற முடியும் என்பதற்கு நாங்களே சாட்சி"

``AstroX எப்படி மற்ற நிறுவனங்களிடம் இருந்து வேறுபடுகிறது?"

``நாங்கள் ஒரு Drone Companyஅல்ல.

நாங்கள்

- AI-based Brain (செயற்கை நுண்ணறிவு சார்ந்த மூளை),

- Autonomous Decision Systems (தன்னிச்சையான முடிவெடுக்கும் அமைப்புகள்),

- Advanced Control Algorithms (மேம்பட்ட கட்டுப்பாட்டு வழிமுறைகள்),

- Secure & Low-Latency Communication (பாதுகாப்பான & குறைந்த தாமத தொடர்பு) ஆகியவற்றை சேர்த்து உருவாக்கி வருகின்றோம்...

Most Drones (பெரும்பாலான ட்ரோன்கள்) பறக்கும்… எங்கள் Drones சிந்திக்கும்.

நாங்கள் டிரோன் அடிப்படையிலான ஒரு Ecosystem (சுற்றுச்சூழல் அமைப்பை)  ஒன்றை உருவாக்குகிறோம். அது எல்லா துறைக்கும் பொருந்தும்"

`2030ல் உங்கள் திட்டம் என்ன?'

``2030க்கு Drone Industry (ட்ரோன் துறை) ஒரு பெரிய மாற்றத்தை காணும். அந்த மாற்றத்தில்:

இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும், அதில்  Tamil Nadu, Innovation Hub (புதுமை மையம்) ஆக வேண்டும், அதில்  ASTROX தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் ஒரு Global Brand (உலகளாவிய பிராண்ட்) ஆக வேண்டும்.

எங்கள் Vision:


"From Tamil Nadu to the World." (தமிழ்நாட்டிலிருந்து உலகிற்கு.)

இறுதியாக ஒரு செய்தி

நான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன். அரசு பள்ளியில் படித்தவன்.

ஒரு நாள் வானத்தை பார்த்து கனவு கண்டவன்…இன்று அதே வானத்தில் Technology உருவாக்குறேன். இதன் அர்த்தம்

 "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல…

 *நீங்கள் எதற்காக எரிகிறீர்கள் என்பதே முக்கியம்."*

Dream. (கனவு காணுங்கள்.)

Struggle. (போராடுங்கள்.)

Build. (கட்டமையுங்கள்.)

ஒரு நாள்…

உங்கள் கனவு மட்டும் இல்ல —

உங்கள் நாட்டின் பெருமை ஆகும்."

(சாகசம் தொடரும்!)

StartUp சாகசம் 58: `திருநெல்வேலியிலிருந்து இப்படி ஒரு நிறுவனமா?' - ChatMaxima சாதித்த கதை

சாட்மேக்சிமாStartUp சாகசம் 58இன்றைய எண்ணிம யுகத்தில், வணிகம் வெற்றிபெறுவது என்பது வெறும் தரமான தயாரிப்புகளை விற்பனை செய்வதில் மட்டும் இல்லை, வாடிக்கையாளர் சேவையிலும் இருக்கிறது. வாடிக்கையாளர் சேவை என்... மேலும் பார்க்க